Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: சிஎஸ்கே படுதோல்வி..15.4 ஓவரில் எல்லாம் போட்டியை முடித்த மும்பை.. நாக் அவுட்டாகும் CSK

மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் சிஎஸ்கே அணி ஆறு தோல்விகளை தழுவி தொடரை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதனை அடுத்து சிஎஸ்கே அணியில் ஷேக் ரசித் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் விளையாடினார்கள்.

CSK vs MI

இருவரும் டெஸ்ட் போட்டி போல் பேட்டிங் ஆடி ரன்களை சேர்த்தனர். கொடூரமாக மட்டை போட்ட ரச்சின் 5 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனை அடுத்து தனது 17 வது வயதில் ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி இருக்கும் ஆயுஷ் மாத்ரே அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். இரண்டு சிக்ஸர், 4 பவுண்டரி என 15 பந்துகளில் அவர் 32 ரன்கள் சேர்த்தார்.

இதனால் சரிவில் இருந்த சிஎஸ்கே ஒரு நல்ல இலக்கை நோக்கி சென்றது. எனினும் அவர் முக்கிய கட்டத்தில் ஆட்டம் இழந்தவுடன் ஜடேஜா சிவம் துபே ஜோடி நடு வரிசையில் மீண்டும் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடினார்கள். எனினும் இப்படியே விளையாடினால் ரசிகர்கள் நம்மளை பொளந்து விடுவார்கள் என்பதை புரிந்து கொண்டு இருவரும் அதிரடியாக ஆட முற்பட்டனர்.

இதில் சிவம் துபே நான்கு சிக்ஸர், இரண்டு பவுண்டரி என 32 பந்துகளின் 50 ரன்கள் எடுக்க, ஜடேஜா கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 35 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தோனி 6 பந்துகளில் வெறும் நான்கு ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதனால் 20 ஓவர் முடிவில் சிஎஸ்கே அணி 5 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் தான் எடுத்தது.

இதனை அடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. இந்த தொடர் முழுவதும் தடுமாறி வந்த ரோகித் சர்மா இன்று பட்டையை கிளப்பினார். 19 பந்துகளில் 24 ரன்கள் எடுக்க ரோஹித் சர்மாவுடன் சூரியகுமார் யாதவ் ஜோடி சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்தார். இருவரும் ஆக்ரோஷமாக விளையாடி போட்டியை விரைவில் முடிக்க பார்த்தனர்.

அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 33 பந்துகளில் அரை சதம் கடக்க சூரியகுமார் யாதவ் 26 பந்துகளில் அரைசிதம் எடுத்தார். இதனால் சிஎஸ்கே அணி படுதோல்வியை நோக்கி சென்றது. ஒரு கட்டத்தில் மும்பை அணி 15 புள்ளி நான்கு ஓவர்கள் எல்லாம் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. ரோகித் சர்மா 45 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார்.

இதில் ஆறு சிக்ஸர்களும் நான்கு பவுண்டரிகளும் அடங்கும்.
சூரியகுமார் முப்பது பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். இதில் ஆறு பவுண்டரிகள், ஐந்து சிக்சர்கள் அடங்கும். சிஎஸ்கே பந்துவீச்சில் ஜடேஜா மட்டும் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இந்த தோல்வியின் மூலம் சிஎஸ்கே அணி தொடரை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

Story first published: Sunday, April 20, 2025, 23:16 [IST]
Other articles published on Apr 20, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+