Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

GT vs MI: பங்காளி மும்பை இந்தியன்ஸ்-க்கு தொடர்ந்து 2வது தோல்வி.. சொதப்பிய பேட்டிங்.. குஜராத் அபாரம்

அகமதாபாத்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களமிறங்கிய குஜராத் அணியில் தொடக்க வீரரான சாய் சுதர்சன் 41 பந்துகளில் 63 ரன்களும், கேப்டன் கில் 27 பந்துகளில் 38 ரன்களும், பட்லர் 24 பந்துகளில் 39 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை.

இதனால் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. மும்பை பந்துவீச்சு தரப்பில் ஹர்திக் பாண்டியா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை அடுத்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா இரண்டு பவுண்டரிகளை விரட்டி எட்டு ரன்கள் எடுத்திருந்த நிலையில் சிராஜ் பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆனார்.

இதே போன்று ரியாண் ரிக்கல்டன் 6 ரன்கள் எடுத்திருந்தபோது சிராஜ் பந்துவீச்சில் ஸ்டெம்புகள் சிதற பெவிலியின் திரும்பினார். இதை அடுத்து மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த திலக் வர்மா, சூரியகுமார் ஆகியோர் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். திலக் வர்மா கொஞ்சம் நிதானம் காக்க 36 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த நிலையில் பிரசித் கிருஷ்ணா ஓவரில் ஆட்டம் இழந்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராபின் மீன்ஸ் இம்பேக்ட் வீரராக களம் இறங்கி வெறும் 3 ரன்கள் மட்டுமே சேர்த்தார். கேப்டன் ஹர்திக் பாண்டியா மும்பை அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் 17 பந்துகளை எதிர்கொண்டு 11 ரன்கள் மட்டுமே சேர்த்தார். சிறப்பாக விளையாடிய சூரியகுமார் யாதவ் 28 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்து ஆட்டம் இருந்தார்.

இதில் நான்கு சிக்ஸர்களும் ஒரு பவுண்டரியும் அடங்கும். இறுதியில் நமன் தீர் 18 ரன்களும், மிட்செல் சான்ட்னர் 9 பந்துகளில் 18 ரன்களும் எடுக்க, மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிஎஸ்கே வில் எப்படி பேட்டிங் சரியில்லையோ அதே போல் மும்பையிலும் இரண்டு வீரர்கள் தவிர மற்றவர்கள் தடுமாறுகிறார்கள். இதனால் 36 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. மும்பை அணி தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, March 29, 2025, 23:50 [IST]
Other articles published on Mar 29, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+