Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4 ஆண்டுகளாக தீராத பிரச்சனை.. குஜராத் வீரருக்கு குறி வைத்த மும்பை.. கோடிகளை கொடுக்கவும் தயங்காது!

மும்பை: ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ளது. ஏற்கனவே ஐபிஎல் உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, அவர்களின் கருத்துகள் பெறப்பட்டுள்ளன. இதுதொடர்பாக பிசிசிஐ உயர்மட்டக் குழுவில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இம்மாத இறுதியில் ஐபிஎல் தொடருக்கான விதிகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக ரீடென்ஷன் மற்றும் ஆர்டிஎம் வாய்ப்புகள் தொடர்பான விதிகள் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அணி நிர்வாகிகளாலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இப்போதே ரசிகர்கள் பலரும் ஒவ்வொரு அணியிலும் எந்தெந்த வீரர் தக்கவைக்கப்பட வாய்ப்புகள் உள்ளது என்று விவாதித்து வருகின்றனர். அந்த வகையில் மும்பையில் 5 வீரர்கள் கட்டாயம் தக்க வைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

ipl 2025 Mumbai indians Mohammad Shami

கேப்டன் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா மற்றும் பும்ரா ஆகிய 4 பேரையும் மும்பை அணி நிச்சயம் ஏலத்திற்கு விடாது. அதேபோல் கடந்த 4 சீசன்களாக மும்பை அணிக்கு 2வது வேகப்பந்துவீச்சாளர் தான் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்திருக்கிறது. ஆர்ச்சர், மில்னே, சாம்ஸ், மதுஷங்கா, கோட்ஸி, மபாகா என்று எத்தனை வந்தாலும், போல்ட் விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப முடியவில்லை.

இதன் காரணமாக மெகா ஏலத்தில் தரமான இந்திய பவுலரை வாங்கும் திட்டத்துடன் மும்பை அணி உள்ளது. வெளிநாட்டு பவுலர்களை நம்பி இனி பிரயோஜனமில்லை என்பதால், இந்திய வீரர்கள் யாரெல்லாம் ஏலத்திற்கு வருகிறார்கள் என்பதை வைத்து மும்பை அணி நிர்வாகம் திட்டமிட தயாராகியுள்ளது. அந்த வகையில் அவர்களின் முதன்மை பட்டியலில் முகமது ஷமி தான் இருக்கிறார்.

ஏற்கனவே குஜராத் அணிக்காக முகமது ஷமி விளையாடிய போது, அவரை ட்ரேட் முறையில் வாங்குவதற்கு மும்பை அணி முயற்சித்தது. அதுமட்டுமல்லாமல் நேரடியாக ஐபிஎல் நிர்வாகத்தை அணுகாமல் முகமது ஷமியை நாடியதும் தெரிய வந்தது. இது ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் குஜராத் அணி நிர்வாகமும் ஐபிஎல் நிர்வாகிகளிடம் புகாரளித்தது.

ஆனால் காயம் காரணமாக முகமது ஷமி கடந்த ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. ஒருவேளை முகமது ஷமி குஜராத் அணியால் தக்கவைக்கப்படவில்லை என்றால், அவரை வாங்க மும்பை அணி தீவிரமாக முயற்சிக்கும். பும்ராவுடன் முகமது ஷமி இணைந்தால் மும்பை அணியால் எளிதாக பவுலிங் அட்டாக்கை சிறப்பாக கட்டமைக்க முடியும். இதன் மூலம் 4 ஆண்டுகளாக கை நழுவி செல்லும் கோப்பையையும் கைப்பற்ற முடியும் என்று பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, August 23, 2024, 7:00 [IST]
Other articles published on Aug 23, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+