Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: மும்பை இந்தியன்ஸ் மேல் ஐபிஎல் கோப்பையை எழுதுங்க! ரோகித் பராக்.. ஐதராபாத்தை ஊதி தள்ளிய MI

மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது அபாரமாக விளையாடி வருகிறது மும்பை இந்தியன்ஸ் அணி முதல் ஐந்து போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்று இருந்தது. இதனால் மும்பை அணி புள்ளி பட்டியலில் சிஎஸ்கே உடன் தான் ஜோடி போட்டுக் கொண்டிருந்தது.

ஆனால் தற்போது தொடர்ந்து நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார்கள். சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான 41 வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது.

Rohit sharma

ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியில் அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் டக் அவுட் ஆகியும், அபிஷேக் ஷர்மா எட்டு ரன்களிலும் ஆட்டம் இழந்தார். இசான் கிஷன் சர்ச்சையான முறையில் ஒரு ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

நிதிஷ்குமார் ரெட்டி இரண்டு ரன்கள் மட்டுமே சேர்க்க ஹைதராபாத் அணி 13 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அன்கீத் வர்மா 12 ரன்கள் சேர்க்க ஹைதராபாத் அணி 35 ரன்கள் 5 விக்கெட்டுகளை இழந்தது. இந்த சூழலில் வழக்கம் போல் ஐதராபாத் அணியின் நட்சத்திர வீரர் ஹென்றிச் கிளாசன் தனியாளாக நின்று ஹைதராபாத் அணியை காப்பாற்றினார் .

ஒன்பது பவுண்டரி இரண்டு சிக்ஸர் என 44 பந்துகளில் 71 ரன்கள் சேர்த்தார். இறுதியில் அபினவ் மனோகர் 43 ரன்கள் எடுக்க சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது. மும்பை பந்துவீச்சில் அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது.

இதில் இம்பேக்ட் வீரராக களம் இறங்கிய ரோகித் சர்மா மீண்டும் தன்னுடைய திறமையை நிரூபித்தார். சன்ரைசர்ஸ் பந்துவீச்சை தனியாளாக நின்று ரோகித் சர்மா சுக்கு நூறாக உடைத்தார். தொடக்க வீரரான ரியான் ரிக்குல்டன் 11 ரன்களில் ஆட்டம் இழக்க, வில் ஜாக்ஸ் 22 ரன்களில் வெளியேறினார். எனினும் ரோகித் சர்மா மட்டும் தன்னுடைய அதிரடியை காட்டி 35 பந்துகளில் அரை சதம் அடித்தார்.

சூரியகுமார் யாதவ் வழக்கம் போல் பந்தை சிக்ஸருக்கு விரட்ட 19 பந்துகளில் அவர் 40 ரன்கள் தொடர்ந்து சிறப்பாக ஆடி ரோகித் சர்மா 46 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார். இதில் 8 பவுண்டரிகளும் மூன்று சிக்ஸர்களும் அடங்கும். இறுதியில் மும்பை அணி 15 புள்ளி நான்கு ஓவரில் மூன்று விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

Story first published: Wednesday, April 23, 2025, 23:08 [IST]
Other articles published on Apr 23, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+