Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025- இது தான் இருப்பதிலே மோசமான ஐபிஎல்.. கொஞ்சம் கூட சஸ்பென்வே இல்ல.. இதை பாருங்க!

மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் 63 லீக் ஆட்டம் முடிவடைந்த நிலையில் இன்னும் 7 லீக் ஆட்டங்கள் எஞ்சி இருக்கிறது. ஆனால் அதற்குள் பிளே ஆப் சுற்றுக்கு எந்த நான்கு அணிகள் தகுதி பெற போகிறது என்பது தெரிய வந்துவிட்டது. இதன் மூலம் ஐபிஎல் தொடங்கி இருக்கும் ஒரு சஸ்பென்ஸ் இம்முறை இல்லாமல் போய்விட்டது.

பொதுவாக ஐபிஎல் தொடரில் கடைசி போட்டி வரை எந்த அணி பிளே ஆஃப் செல்லும் என்பது தெரியாது. மூன்று அணிகள் தகுதி பெற்றாலும் கடைசி இடத்திற்கு கடும் போட்டி நிகழும். ஆனால் இம்முறை தான் எந்தவித போட்டியில் நான்கு அணிகளும் எளிதாக சென்று விட்டது.

IPL Playoffs

இதன் மூலம் நடப்பு சீசன் சுவாரசியமே இல்லாதவன் ஆகிவிட்டதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு காரணம் சிஎஸ்கே, ராஜஸ்தான், சன்ரைசர்ஸ், கொல்கத்தா போன்ற அணிகள் அதிக தோல்வியை தழுவியது தான் என்று கூறப்படுகிறது. மேலும் இம்பாக்ட் வீரர் விதி காரணமாக தான் இந்த சிக்கல் நிலவுவதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு சீசனிலும் எத்தனை போட்டிகள் எஞ்சிய நிலையில் நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம். 2008 ஆம் ஆண்டு சீசன் 2 போட்டிகள் எஞ்சிய நிலையில் பிளே ஆப் போட்டிக்கு தகுதி பெற்ற அணிகள் தெரியவந்தது. 2009 ஆம் ஆண்டு கடைசி போட்டி வரை பரபரப்பாக இருந்தது. இதேபோன்று 2010 ஆம் ஆண்டும் கடைசி போட்டி வரை விறுவிறுப்பாக இருந்தது.

2011 ஆம் ஆண்டு மூன்று போட்டிகளும், 2012 ஆம் ஆண்டு ஒரு போட்டியும் எஞ்சிய நிலையில் பிளே ஆப் அணிகள் தீர்மானிக்கப்பட்டது. 2013, 2014, 2015, 2016 என தொடர்ந்து நான்கு சீசனும் கடைசி போட்டி அன்றுதான் பிளே ஆப் அணிகள் எது என்று தீர்மானிக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டு ஒரு போட்டி எஞ்சிய நிலையில், பிளே ஆப் அணிகள் எது என்று தெரியவந்தது.

2018, 2019 மற்றும் 2020 என மூன்று சீசனிலும் கடைசி போட்டி அன்றுதான் பிளே ஆப் அணி எது என்பது குறித்து தெரிய வந்தது. 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு சீசனில் ஒரு போட்டி எஞ்சிய நிலையில் என தெரிய வந்தது. 2023 ஆம் ஆண்டு கடைசி போட்டி அன்றுதான் பிளே ஆப் க்கு எந்த அணிகள் தகுதி பெற்றது என தெரியவந்தது. 2024 ஆம் ஆண்டு இரண்டு போட்டிகள் எஞ்சிய நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள் குறித்து தெரிய வந்தது. ஆனால் தற்போது 2025 ஆம் ஆண்டு சீசனில் ஏழு போட்டிகள் எஞ்சிய நிலையில் பிளே ஆப் எந்த அணிகள் தகுதி பெற்று இருப்பது என தெரிய வந்துவிட்டது. இதன் மூலம் நடப்பு சீசன் சுவாரஸ்யமே இல்லாமல் ஒன்சைடாக மாறி இருக்கிறது. எனவே அடுத்த சீசனில் சில விதிகளில் பிசிசிஐ அதிரடி மாற்றங்கள் நிகழ் வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, May 22, 2025, 23:25 [IST]
Other articles published on May 22, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+