For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“இனி சாம்பியன் டீம்லாம் கிடையாது ஓடிருங்க”.. சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ்-ஐ ஓடவிட்ட ஆர்சிபி, எல்எஸ்ஜி

மும்பை: 2025 ஐபிஎல் தொடரின் துவக்கம் யாரும் எதிர்பாராத வகையில் அமைந்திருக்கிறது. இதுவரை ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டு போட்டிகள் முடிவில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஐந்து முறை ஐபிஎல் கோப்பை வென்ற நிலையில் தற்போது ஏழாவது இடத்தில் உள்ளது. முதல் மூன்று இடங்களில் இதுவரை ஐபிஎல் கோப்பை வெல்லாத மூன்று அணிகள் பிடித்துள்ளன.

யாரும் எதிர்பாராத வகையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி நான்கு புள்ளிகள் மற்றும் 2.266 என்ற நெட் ரன் ரேட்டுடன் முதலிடத்தில் உள்ளது.

IPL 2025 Points Table RCB DC at top 2 ranks CSK amp amp MI Struggle

இரண்டாவது இடத்தில் அக்சர் பட்டேல் தலைமையில் விளையாடும் டெல்லி கேப்பிட்டல்ஸ் உள்ளது. அந்த அணி இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகளுடன் நான்கு புள்ளிகள் மற்றும் 1.320 நெட் ரன் ரேட்டுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தான் விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றியுடன் 0.963 நெட் ரன் ரேட்டுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இரண்டு புள்ளிகளுடன் உள்ளன.

ஆறாவது இடத்தில் மூன்று முறை ஐபிஎல் கோப்பை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்ளது. அந்த அணி தான் ஆடிய இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி பெற்றுள்ளது. ஏழாவது இடத்தில் சிஎஸ்கே, எட்டாவது இடத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ஒன்பதாவது இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பத்தாவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் உள்ளது. இதில் ஒரு வெற்றி கூட பெறாத ஒரே அணி மும்பை இந்தியன்ஸ் மட்டுமே.

இதையடுத்து 2025 ஐபிஎல் தொடர் மொத்தம் 13 ஐபிஎல் கோப்பைகளை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு அதிர்ச்சி அளித்துத் துவங்கி உள்ளது. சிஎஸ்கே அணி 2020 ஐபிஎல் தொடரில் விளையாடியதைப் போல விளையாடுவதாக ரசிகர்கள் இப்போதே புலம்பி வருகின்றனர்.

மறுபுறம் மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த ஆண்டு புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது. இப்போதும் அதே இடத்தில் இருந்தே தனது ஆண்டைத் துவக்கி உள்ளது என அந்த அணியின் ரசிகர்களும் புலம்பி வருகின்றனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தங்களுக்கு கோப்பை வென்று தந்த கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயரை வெளியேற்றியதால் இந்த மோசமான நிலைக்கு ஆளாகி இருப்பதாக அந்த அணியின் ரசிகர்களும் சோகத்தில் உள்ளனர். இந்த ஆண்டு ஆர்சிபி, டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளின் ஆண்டாக இருக்குமா? என ரசிகர்கள் தங்களது ஊகங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

செய்தி சுருக்கம்:

  • 2025 ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலிடத்தில் உள்ளது.

  • இதுவரை கோப்பை வெல்லாத ஆர்சிபி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

  • டெல்லி கேப்பிட்டல்ஸ் இரண்டாவது இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

  • ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

  • நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏழாவது இடத்தில் உள்ளது.

  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆறாவது இடத்தில் உள்ளது.

  • ரசிகர்கள் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளின் மோசமான ஆட்டம் குறித்து வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Monday, March 31, 2025, 9:02 [IST]
Other articles published on Mar 31, 2025
English summary
IPL 2025 Points Table: RCB, DC at top 2 ranks, CSK & MI Struggle
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+