For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL புள்ளிப்பட்டியல்: மும்பை இந்தியன்ஸ்-க்கு விழுந்த அடி.. ஆர்சிபி அணி எந்த இடம்? சிஎஸ்கே நிலை என்ன?

மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் முடிவில் புள்ளி பட்டியலில் மாற்றம் நடந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி மிக பெரிய சரிவை சந்தித்து எட்டாவது இடத்திற்கு சென்றுள்ளது.

ஒன்பதாவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் இருக்கும் நிலையில் அந்த அணியுடன் மும்பை இந்தியன்ஸ் அணியும் இணைந்துள்ளது. ஐந்து முறை ஐபிஎல் கோப்பை வென்ற இந்த இரண்டு அணிகளும் புள்ளி பட்டியலில் பின்தங்கியுள்ளன. அதே சமயம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 12 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றி மூலம் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

IPL 2025 Points Table Updated RCB Jumps to Third MI and CSK in Bottom Half

பெங்களூரு அணி நான்கு போட்டிகளில் மூன்று வெற்றிகள் மற்றும் ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மூன்று போட்டிகளில் மூன்று வெற்றிகளுடன் 6 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் 4 போட்டிகளில் 6 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.

நெட் ரன் ரேட் அடிப்படையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் முதலிடத்தில், குஜராத் டைட்டன்ஸ் இரண்டாவது இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று நான்கு தோல்விகளுடன் இரண்டு புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

2025 ஐபிஎல் புள்ளி பட்டியல்:

  1. டெல்லி கேப்பிட்டல்ஸ் - 3 போட்டிகள் - 3 வெற்றி - 0 தோல்வி - 1.257 NRR - 6 புள்ளிகள்

  2. குஜராத் டைட்டன்ஸ் - 4 போட்டிகள் - 3 வெற்றி - 1 தோல்வி - 1.031 NRR - 6 புள்ளிகள்

  3. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 4 போட்டிகள் - 3 வெற்றி - 1 தோல்வி - 1.015 NRR - 6 புள்ளிகள்

  4. பஞ்சாப் கிங்ஸ் - 3 போட்டிகள் - 2 வெற்றி - 1 தோல்வி - 0.074 NRR - 4 புள்ளிகள்

  5. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 4 போட்டிகள் - 2 வெற்றி - 2 தோல்வி - 0.070 NRR - 4 புள்ளிகள்

  6. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 4 போட்டிகள் - 2 வெற்றி - 2 தோல்வி - 0.048 NRR - 4 புள்ளிகள்

  7. ராஜஸ்தான் ராயல்ஸ் - 4 போட்டிகள் - 2 வெற்றி - 2 தோல்வி - -0.158 NRR - 4 புள்ளிகள்

  8. மும்பை இந்தியன்ஸ் - 5 போட்டிகள் - 1 வெற்றி - 4 தோல்வி - -0.010 NRR - 2 புள்ளிகள்

  9. சென்னை சூப்பர் கிங்ஸ் - 4 போட்டிகள் - 1 வெற்றி - 3 தோல்வி - -0.891 NRR - 2 புள்ளிகள்

  10. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 5 போட்டிகள் - 1 வெற்றி - 4 தோல்வி - -1.629 NRR - 2 புள்ளிகள்

Story first published: Tuesday, April 8, 2025, 7:38 [IST]
Other articles published on Apr 8, 2025
English summary
IPL 2025 Points Table 20th match: RCB Jumps to Third, MI and CSK in Bottom Half
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+