Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

MI vs PBKS போட்டிக்கு புது தலைவலி.. எத்தனை சதவீதம் மழை பெய்யும்? வெளியான வானிலை அறிக்கை

அகமதாபாத்: 2025 ஐபிஎல் தொடர் பிளே ஆஃப் சுற்றில் இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டி நடைபெற உள்ளது. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்தப் போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கைகள் சுட்டிக்காட்டி இருக்கின்றன.

இதை அடுத்து, இந்தப் போட்டி முழுவதுமாக நடைபெறுமா அல்லது மழையால் பாதிக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. எத்தனை சதவீதம் மழை பெய்யும் என்பது பற்றிப் பார்க்கலாம்.

2025 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றின் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலிடத்தை பிடித்திருந்தது. அடுத்து முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக விளையாடியது. அந்தப் போட்டியில் படுதோல்வி அடைந்த பஞ்சாப் கிங்ஸ் அணி, இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் விளையாட உள்ளது.

IPL 2025 Qualifier 2 Rain Threat Looms Over Punjab Kings vs Mumbai Indians Clash

மறுபுறம், புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்து மும்பை இந்தியன்ஸ் அணி, எலிமினேட்டர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டிக்கு முன்னேறியது.
இந்த இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்தப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியின் போது 11 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகப் பல்வேறு வானிலை அறிக்கைகளும் சுட்டிக்காட்டி இருக்கின்றன.

பொதுவாக, அதிக அளவிலான மழை பெய்ய வாய்ப்பு இல்லை; சிறிதளவு மட்டுமே மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, இந்தப் போட்டி முழுவதுமாக நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே, ரசிகர்கள் முழுமையான போட்டியை எதிர்பார்க்கலாம்.

முன்னதாக, இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டி மற்றும் ஐபிஎல் இறுதிப் போட்டியும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அங்கு இந்த தேதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை அறிக்கைகள் சுட்டிக்காட்டியதால், அங்கிருந்து இந்த இரண்டு போட்டிகளையும் அகமதாபாத் மைதானத்திற்கு மாற்றியது பிசிசிஐ.

இந்த மாற்றத்திற்குப் பிறகு, அகமதாபாத்தில் இந்தப் போட்டி நடைபெறும் போதும் மழை பெய்தால் நிச்சயமாக விமர்சனத்திற்கு உள்ளாகும். மறுபுறம், இந்தப் போட்டியில் வென்றால்தான் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறலாம் என்பதால், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மழை பெய்தால் எப்படி விளையாட வேண்டும் என்பதையும் சேர்த்து திட்டமிட வேண்டிய சூழ்நிலையில் உள்ளன.

Story first published: Sunday, June 1, 2025, 7:45 [IST]
Other articles published on Jun 1, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+