Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி ஏன் பேட்டிங் செய்ய வருவதில்லை தெரியுமா? ரசிகர்களுக்காக அவ்வளவு உழைப்பு.. அஸ்வின் உருக்கம்

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த சீசனில் செல்ல முடியாமல் போனதற்கு தோனி பேட்டிங் செய்ய முன்பே வராதது தான் காரணம் என்று பலரும் விமர்சித்து இருந்தார்கள்.
இந்த நிலையில் தோனி ஏன் பேட்டிங் செய்ய வருவதில்லை?

அவருக்கு அப்படி என்னதான் சிக்கல் இருக்கிறது. அறுவை சிகிச்சை முடித்தும் ஏன் தோனியால் வெற்றிகரமாக பேட்டிங் செய்ய முடியவில்லை என்பது குறித்து தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் விளக்கம் அளித்திருக்கிறார்.

ipl 2025 ipl retention ms dhoni

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் பொதுவாக ஒருவரின் முட்டி ஜவ் தேயாமல் இருக்க வேண்டுமென்றால் ஒருவிதமான திரவம் சுரக்கும். அந்த திரவம் சுரப்பது நின்றால் அது இரண்டு எலும்பையும் தேய்ப்பதை தடுக்க முடியாது. இதன் காரணமாக கடும் மூட்டு வலி ஏற்படும்.

தோனி கடந்த 20 ஆண்டுகளாக விக்கெட் கீப்பராக இருந்திருக்கிறார். ஒவ்வொரு போட்டியிலும் அவர் ஸ்டெம்புக்குப் பின்னால் முட்டியை மடக்கி அமர்ந்து இருப்பார். இதன் மூலம் அவருக்கு முட்டியில் பல பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கும். இதனால் தான் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் தங்களுடைய 35 வது வயதில் விக்கெட் கீப்பராக இருப்பதை நிறுத்திக் கொள்வார்கள்.

வெறும் சாதாரண வீரராக அணியில் தொடர்வார்கள். ஆனால் பூமி தொடர்ந்து விக்கெட் பேப்பர் பேட்ஸ்மேன் ஆகவே இருந்திருக்கிறார். அவருடைய ஜவ்வு தோய்ந்த நிலையில் மருத்துவர்கள் செயற்கையான முறையில் அந்த திரவத்தை தோனியின் முட்டியில் செலுத்தி இருக்கிறார்கள். இதற்காக அறுவை சிகிச்சையும் நடைபெற்றிருக்கிறது.

இருந்தும் தோனியால் பழைய முறைப்படி நடக்கவோ, நிற்கவோ பேட்டிங் செய்யவோ முடியவில்லை. அதையும் மீறி நான் தோனி ரசிகர்களுக்காக களத்தில் நிற்கிறார். என்னை பொறுத்தவரை இந்த மூட்டு வலி பிரச்சனை கையாளும் அளவுக்கு இருந்தால் நிச்சயம் தோனி அடுத்து சீசனில் விளையாடுவார். ரசிகர்களுக்காக அவர் செய்யும் காரியத்தை பார்க்கும் போது மெய்சிலிர்க்கிறது என்று அஸ்வின் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, August 13, 2024, 16:46 [IST]
Other articles published on Aug 13, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+