Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: ஜோப்ரா ஆர்ச்சர் பவுலிங்கை பார்க்கும் போது அம்பானி வயிறு எரியும்.. வேற லெவல் பவுலிங்

மும்பை: ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோப்ரா ஆர்சார் முதல் மூன்று சீசன்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அபாரமாக விளையாடினார். 2018 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் ஜோப்ரா ஆர்ச்சர் விளையாடி வருகிறார்.

ராஜஸ்தான் அணிக்காக 2018 ஆம் ஆண்டு 10 போட்டிகள் விளையாடி 15 விக்கெட்களும், 2019 ஆம் ஆண்டு 11 போட்டியில் விளையாடிய 11 விக்கெட்களும், 2020 ஆம் ஆண்டு 14 போட்டிகளின் விளையாடி 20 விக்கெட்டு களையும் கைப்பற்றி இருந்தார்.இதனால் ஜோப்ரா ஆர்ச்சர் மிகவும் முக்கியமான பவுலராக ஐபிஎல் தொடரில் விளங்கினார்.

Jofra archer

இந்த சூழலில் தான் ஜோப்ரா ஓடும் குதிரை என நினைத்து அவர் மீது பந்தயம் கட்டியது அம்பானி குடும்பம்.2022 ஐ பி எல் மெகா ஏலத்தின் போது ஜோப்ரா ஆர்ச்சரை பெரும் தொகை கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. இதன்மூலம் ஒருபுறம் பும்ரா, மறுபுறம் ஜோப்ரா ஆர்ச்சர் என இருவரும் பந்து வீசினால் எப்படி இருக்கும் என்று ரசிகர்களுக்கு ஒரு மெகா படத்தை ஓட்டி காட்டியது.

ஆனால் ஜோப்ரா ஆர்ச்சர் அப்போது காயம் காரணமாக விளையாடாமல் இருந்தார். இதற்கு விளக்கம் அளித்த மும்பை அணி ஆர்ச்சர் காயம் அடைந்திருந்தாலும் அவர் அடுத்த சீசனில் விளையாடுவார் என்றும் நாங்கள் எதிர்கால திட்டத்திற்காக அவரை வாங்கினோம் என்றும் கூறியிருந்தது. ஆனால் மும்பை அணிக்கு போதாத காலமாக ஜோப்ரா ஆர்ச்சர் 2023 ஆம் ஆண்டு சீசனிலும் காயத்தில் தான் இருந்தார்.
வெறும் ஐந்து போட்டிகள் மட்டுமே விளையாடி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அவருடைய எக்கனாமி 9.5 என்ற அளவில் இருந்தது. மேலும் அவருடைய பவுலிங்ஆவரேஜ் 95 என்ற அளவு இருந்தது. இதை அடுத்து 2024 ஆம் ஆண்டு ஜோப்ரா காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை. ஜோப்ரா ஆர்ச்சரை நம்பி மும்பை இந்தியன்ஸ் அணி போட்ட கணக்கு மிகப்பெரிய தவறில் போய் முடிந்தது.இதனால் மும்பை அணி கடந்த நான்கு சீசனில் வெறும் ஒருமுறை மட்டும்தான் பிளே ஆப் போக முடிந்தது.

இந்த சூழலில் ஐபிஎல் 2025 மெகா ஏலத்திலும் ஜோப்ரா ஆர்ச்சர் வாங்க மும்பை அணி முயற்சி செய்தது. ஆனால் அவர்களுக்கான தொகை அதிகமாக போனதை எடுத்து வாங்காமல் பின்வாங்கியது. இந்த ஏலத்தில் 12 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் அணி அவரை வாங்கியது. இந்த நிலையில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஆர்ச்சர் 76 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

இதனால் மும்பை அணி தாங்கள் தப்பித்து விட்டோம் என எண்ணியது. எனினும் ராஜஸ்தான் அணி ஜோசப் ஆர்ச்சருக்கு தொடர் நம்பிக்கையை வழங்கியது. அது தற்போது கண்கூடாக தெரிகிறது. ஆர்ச்சர் தன்னுடைய பழைய அபாரமான பந்துவீச்சை வெளிக்காட்டி வருகிறார். குறிப்பாக சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் 13 ரன்ளை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்திய நிலையில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 25 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தான் அணி போட்டியை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

அதேபோன்று குஜராத்துக்கு எதிரான ஆட்டத்திலும் தன்னுடைய அனல் பறக்கும் பந்துவீச்சை ஆர்ச்சர் வீச அதனை தொட முடியாமல் குஜராத் வீரர்கள் தடுமாறினர். இந்த போட்டியிலும் நான்கு ஓவர்கள் வீசி 30 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து கில் விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் ஆர்ச்சர் தன்னுடைய பழைய பந்துவீச்சு பார்மை மீட்டு விட்டார். இதனை பார்க்கும் மும்பை அணி நிர்வாகம் உண்மையிலேயே வயிறு எரிகிறதாம். எங்களுக்கு இப்படி வீசுவார் என்று வாங்கி வைத்தால் சொதப்பி விட்டு தற்போது ராஜஸ்தானுக்கு மீண்டும் நன்றாக விளையாடுகிறாரே என்று மும்பை அணி புலம்பி வருகிறார்களாம்.

Story first published: Wednesday, April 9, 2025, 23:56 [IST]
Other articles published on Apr 9, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+