For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL 2025 -உடையும் குஜராத் அணி! மும்பை அணியில் இணைகிறார் ரஷித் கான்.. பும்ராவுடன் இணைந்தால் மாஸ் தான்

மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் நவம்பர் மாதம் 24 மற்றும் 25ஆம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு 10 அணிகளும் எந்த வீரர்களை தக்க வைத்துக்கொள்ள போகிறோம். எந்த வீரர்களை விடுவிக்கப் போகிறோம் என்பதை வரும் அக்டோபர் 31ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அறிவிக்க வேண்டும்.

இந்த சூழலில் ஒவ்வொரு அணியும் பல வீரர்களுடன் இணைந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சூழலில் குஜராத் அணியின் நட்சத்திர வீரரான ரஷீத் கான் 20 கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாக தெரிகிறது.

ipl 2025 rashid khan mumbai indians 2025

ஆனால் குஜராத் அணி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் தான் ஏலத்தில் கலந்து கொள்ள போவதாக ரஷீத் கான் விருப்பம் தெரிவித்துள்ளார். குஜராத் அணிக்காக 45 போட்டிகளில் ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ள ரஷீத் கான் 56 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் குஜராத் அணி சாம்பியன் பட்டம் பெற ரஷீத் கான் முக்கிய காரணமாக இருந்தார்.

இந்த சூழலில் மும்பை இந்தியன்ஸ் அணி ரஷித் கானை சந்தித்து ஏலத்தில் பங்கேற்க அழைத்திருக்கிறது. இதற்கு ரஷித் காணும் ஒப்புக்கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக ரஷீத் கான் ஏலத்தில் பங்கேற்றால் மும்பை அணி அவருக்கு என தனியாக 20 கோடி ரூபாயை ஒதுக்கி வைத்து அவரை ஏலத்தில் எப்படியாவது எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது.

ஏற்கனவே ரஷித் கான் உலகம் முழுவதும் நடைபெற்று வரும் டி20 தொடரில் மும்பை அணிக்காக மூன்று தொடர்களில் விளையாடுகிறார். MI கேப்டவுன்,எம் ஐ எமிரேட்ஸ், எம் ஐ, நியூயார்க் என மூன்று அணிகளில் ரசித்கான் இருப்பதால் ஐபிஎல் தொடரிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாட அவர் ஆர்வம் காட்டுகிறார்.

இதன் மூலம் நான்கு மும்பை அணிக்கு விளையாடி மிகப்பெரிய தொகையை பெற்றுக் கொள்ளலாம் என்ற நினைப்பில் ரசித் கான் இருக்கின்றார். ஒருவேளை ரஷித் கான் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்று விட்டால் பும்ரா, ரஷித் கான் என இருவரும் பந்துவீச்சு படையில் இருப்பார்கள். இது எதிரணி பேட்ஸ்மன்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும்.

Story first published: Tuesday, October 22, 2024, 22:56 [IST]
Other articles published on Oct 22, 2024
English summary
IPL 2025 - Rashid khan might leave GT and Plays for Mumbai indians IPL 2025 -உடையும் குஜராத் அணி! மும்பை அணியில் இணைகிறார் ரஷித் கான்.. பும்ராவுடன் இணைந்தால் மாஸ் தான்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+