IPL 2025: சச்சின் மகத்தான சாதனையை முறியடித்த ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார்
பெங்களூரு: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஆர்சிபி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய 34வது லீக் ஆட்டம் மழையால் பெருமளவு பாதிக்கப்பட்டது. இதனால் போட்டி 14 ஓவராக குறைக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் ஆர் சி பி அணியை பேட்டிங் செய்ய பணித்தது.
இதனை அடுத்து களமிறங்கிய ஆர் சி பி அணி ஒரு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆர்சிபி அணியின் முன்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை வெறுப்பேற்றினர். பில் சால்ட் நான்கு ரன்களிலும், விராட் கோலி ஒரு ரன்னிலும், லியாம் லிவிங்ஸ்டோன் நான்கு ரன்களிலும் ஜித்தேஷ் சர்மா இரண்டு ரன்களிலும், குர்னல் பாண்டியா ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இதன் காரணமாக ஆர்சிபி அணி 42 ரன்கள் சேர்ப்பதற்குள் ஏழு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த ஸ்கோரில் அதிகபட்சமாக ரஜத் பட்டிதார் மட்டும் 18 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார். இறுதியில் டிம் டேவிட் 26 பந்துகளில் அரை சதம் அடித்து அணியை கௌரவமான இலக்கிற்கு கொண்டு சென்றார். இந்த நிலையில் ரஜத் பட்டிதார் 23 ரன்கள் அடித்திருந்த போது ஒரு மகத்தான சாதனையை முறியடித்து இருக்கிறார்.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் குறைந்த இன்னிங்ஸில் ஆயிரம் ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ருதுராஜ் ஆகியோரை ரஜத் பட்டிதாரை பின் தள்ளி இருக்கின்றார். சச்சின் டெண்டுல்கரும், ருதுராஜூம் 31 இன்னிங்ஸில் ஆயிரம் ரன்களை கடந்தனர். ஆனால் தற்போது ரஜத் 30 இன்னிங்ஸ்லே ஆயிரம் ரன்களை கடந்து அசத்தி இருக்கிறார்.
இந்திய வீரர்களே குறைந்த இன்னிங்சில் ஆயிரம் ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை குஜராத் அணியின் சாய் சுதர்சன் பெற்றிருக்கிறார். சாய் சுதர்சன் 25 இன்னிங்ஸ்களில் எல்லாம் ஆயிரம் ரன்கள் கடந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமான ஐபிஎல் இல் ஆஸ்திரேலிய வீரர் சேன் மார்ஸ் 21 இன்னிங்ஸில் ஆயிரம் ரன்களை கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரெக்கார்டை அவர் 2011 ஆம் ஆண்டு படைத்தார்.


Click it and Unblock the Notifications