Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025- ஆர்சிபி அணி ஏலத்தில் வாங்க போகும் வீரர்கள் யார்? கோலி படையின் புதிய தளபதிகள் லிஸ்ட்

பெங்களூரு: ஆர்சிபி அணி இதுவரை ஒரு முறை கூட ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை. இதனால் கேப்டன் பதவியை விட்டு விலகி விராட் கோலி டுபிளசிஸை, கேப்டனாக நியமிக்க செய்தார். ஆனால் அப்போதும் ஆர்சிபி அணி பிளே ஆஃப் ஐ தாண்டவில்லை.

இந்த நிலையில் இம்முறையாவது மெகா ஏலத்தை பயன்படுத்தி நல்ல அணியை கட்டமைக்க வேண்டும் என்பதில் ஆர்சிபி அணி குறியாக இருக்கிறது. இதற்காக ஆர்சிபி அணி 83 கோடி ரூபாய் வைத்து கொண்டு ஏலத்தை சந்திக்கப் போகிறது.

ipl 2025 rcb virat kohli

ஆறு வீரர்களை தக்க வைக்கலாம் என்ற விதி இருந்தும் ஆர்சிபி அணி முதல் வீரராக விராட் கோலியை 21 கோடி ரூபாய்க்கும், ரஜத் பட்டிதாரை 11 கோடி ரூபாய்க்கும், யாஷ் தயாலை 5 கோடி ரூபாய்க்கும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் ஆர்சிபி அணியிடம் மூன்று ஆர்டிஎம் கார்டு இருக்கிறது.

ஆர்சிபி அணியில் இருந்த முஹம்மது சிராஜ், ஆல் கவுண்டர் மேக்ஸ்வெல், கேமரான் கிரீன் மற்றும் கேப்டன் டுப்ளசிஸ் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த தருணத்தில் ஆர்சிபி அணி இடம் மூன்று ஆர்டிஎம் கார்டு வசதி இருப்பதால் இதில் சிராஜ், கேமரான் கிரீன் ஆகியோரை மீண்டும் ஏலத்தில் மூலம் ஆர்சிபி அணி தக்க வைக்கும்.

டுபிளசிஸ்க்கு வயது 40 ஆகிவிட்டதால் அவர் வேண்டாம் என நினைக்கும் ஆர்சிபி புதிய கேப்டனை தேடும் பணியில் இருக்கும். இந்த தருணத்தில் தான் ஏலத்தில் ஆர்சிபி அணியின் முன்னாள் வீரர், கே எல் ராகுல் கலந்து கொள்ள இருக்கின்றார். இதனால் கே எல் ராகுலை எப்படியாவது ஆர்சிபி அணிக்கு கொண்டு வந்து அவரை கேப்டனாக்கும் முயற்சியில் ஆர்சிபி அணி இருக்கும்.

இதன் மூலம் தொடக்க வீரர் மற்றும் கேப்டன் விக்கெட் கீப்பர் போன்ற மூன்று பொறுப்பிற்கும் கேஎல் ராகுல் சரியான நபராக திகழ்வார். இதேபோன்று ஆர்சிபி அணி தொடக்க வீரருக்கு அல்லது ஜாஸ் பட்லர் ஆகியோரை தேர்வு செய்யும். ஆர்சிபி அணியில் நடு வரிசையில் பிரச்சனை இருப்பதால் இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டோன் தேர்வு செய்யலாம். இதேபோன்று ஆர்சிபி அணிக்கு தற்போது சுழற் பங்குவீச்சாளர்கள் இல்லை. இதனால் ஏலத்தில் பங்கேற்று இருக்கும் வாஷிங்டன் சுந்தர் மற்றும் அஸ்வினை ஆர்சிபி அணி வாங்க முயற்சி செய்யலாம்.

அது மட்டுமில்லாமல் ஆர்சிபி அணியிலிருந்து விலகிச் சென்ற சாஹலை மீண்டும் ஆர்சிபிக்கு கொண்டு வர வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் டிவிலியர்ஸ் கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் ஆர்சிபி அணியில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு குறை இருக்கிறது. இதனால் சன்ரைசர்ஸ் அணி விடுவித்துள்ள புவனேஸ்வர் குமார் மற்றும் ஏலத்தில் இருக்கும் ரபடா போன்ற வீரர்களை ஆர்சிபி எடுத்தால் அந்த அணியின் பந்துவீச்சு பலமாக மாறிவிடும் என்று டிவில்லியர்ஸ் குறிப்பிட்டு இருக்கிறார். இதேபோன்று நடு வரிசையில் இந்திய அணியின் இளம் வீரர் ஒருவர் வேண்டுமென்றால் 75 லட்சம் ரூபாய் அடிப்படை விலையாக நிர்ணயித்திருக்கும் சர்பராஸ் கானை வாங்கிக் கொள்ளலாம்.

இதன் மூலம் கேல் ராகுல், ஜாஸ் பட்லர், விராட் கோலி, ரஜத் பட்டிதார், சர்பராஸ் கான், லிவிங்ஸ்டோன், வாஷிங்டன் சுந்தர், அஸ்வின்,சிராஜ் ரபாடா, புவனேஸ்வர் குமார் என பிளையிங் லெவனை ஆர்சிபி அணி பலமாக தயாரித்துவிடலாம். ஆர்சிபி அணியிடம் எப்போதுமே இளம் வீரர்களை கண்டெடுத்து அணியில் சேர்க்கும் scouting team நன்றாகவே இருக்கிறது.இதனை பயன்படுத்தி அவர்கள் மண்ணுக்குள் புதைந்திருக்கும் வைரம் போல் சில திறமை வாய்ந்த வீரர்களை எடுக்கலாம்.

Story first published: Tuesday, November 12, 2024, 16:11 [IST]
Other articles published on Nov 12, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+