IPL 2025- Retention-க்கு பிறகு ஒவ்வொரு அணியும் ஏலத்தில் எவ்வளவு பணம், RTM கையில் வைத்திருக்கிறது
மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஏலத்திற்கு முன்பு ஒவ்வொரு அணியும் எவ்வளவு பணத்தை கையில் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு அணிக்கும் எவ்வளவு ஆர்டிஎம் கார்டு வாய்ப்பு இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம்.
ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்றால் களத்தில் மட்டும் அல்லாமல் களத்திற்கு வெளியேவும் ஏலத்தில் சரியான திட்டத்தை வைத்து வீரர்களை தேர்வு செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். அந்த வகையில் சிஎஸ்கே, மும்பை அணி எப்போதுமே ஏலத்தில் கில்லியாக இருந்திருக்கிறது.

இந்த சூழலில் பல அணிகள் பெரிய அளவில் கையில் பணத்தை வைத்து இருந்தாலும், ஏலத்தில் சொதப்புவார்கள். இந்த சூழலில் ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு அணியும் எவ்வளவு கையில் பணத்தை தற்போது வைத்திருக்கிறது என்பதை பார்க்கலாம்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது கைவசம் 55 கோடி ரூபாய் பணத்தை வைத்து இருக்கிறது.
அது மட்டுமல்லாமல் சிஎஸ்கே அணி ஒரு ஆர்டிஎம் கார்டையும் ஏலத்தில் பயன்படுத்தலாம். இதே போன்று மும்பை இந்தியன்ஸ் அணி தங்கள் கைவசம் 45 கோடி ரூபாய் பணத்தை வைத்து இருக்கிறது. மும்பை அணிக்கும் ஒரு ஆர்.டி.எம் கார்டு இருக்கின்றது. டெல்லி அணியிடம் 76 கோடியே 25 லட்சம் ரூபாய் கையிருப்பு இருக்கிறது. மேலும் டெல்லி அணியிடம் இரண்டு ஆர் டி எம் கார்டை பயன்படுத்த முடியும்.
நடப்பு சாம்பியன் ஆன கொல்கத்தா அணியிடம் கைவசம் 63 கோடி இருக்கிறது. ஆனால் கே கே ஆர் அணியிடம் எந்த ஒரு ஆர்டிஎம் கார்டும் இல்லை. ஆர் சி பி அணியிடம் கைவசம் 83 கோடி ரூபாய் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஆர் சி பி அணியிடம் மூன்று ஆர்டிஎம் கார்டு இருக்கின்றது.லக்னோ அணியிடம் 69 கோடி ரூபாய் கைவசம் இருக்கிறது.
லக்னோ அணி ஒரு ஆர்டிஎம் உடன் ஏலத்திற்கு செல்கிறது. பஞ்சாப் அணியிடம் அதிகபட்சமாக 110 கோடி ரூபாய் கைவசம் இருக்கிறது. பஞ்சாப் அணியிடம் அதிகபட்சமாக நான்கு ஆர்டிஎம் கார்டு இருக்கின்றது. சன்ரைசர்ஸ் அணியிடம் கைவசம் 45 கோடி ரூபாய் இருக்கிறது. இதேபோன்று சன்ரைசர்ஸ் அணியிடம் ஒரு ஆர்டிஎம் கார்டும் உள்ளது.
ராஜஸ்தான் அணியிடம் கைவசம் 41 கோடி ரூபாய் இருக்கிறது. அவர்கள் ஏலத்தில் எந்த ஒரு ஆர்டிஎம் கார்டையும் பயன்படுத்த முடியாது. குஜராத் அணி இடம் கைவசம் 69 கோடி ரூபாய் இருக்கிறது. குஜராத் அணியிடம் ஒரு ஆர் டி எம் கார்டு வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications