Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL - சிஎஸ்கே செய்வது பெரிய தவறு.. தோனிக்காக ஒரு இளம் வீரரின் வாழ்க்கையை கெடுப்பதா?

சென்னை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் தோனியை தக்க வைக்க வேண்டும் என்பதற்காக சிஎஸ்கே ஒரு விபரீத முடிவை எடுக்க உள்ளது. தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த நிலையில் அடுத்த ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்குள் தோனி ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் ஆகிவிடும்.

இதை வைத்து தான் சிஎஸ்கே ஒரு விபரீத முடிவு எடுக்கப் போகிறது. அதாவது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் ஆனால் அந்த வீரரை இந்திய அணிக்காக ஆடாத வீரராக கருத வேண்டும் என்ற ஒரு விதி 2021 வரை இருந்தது.

ipl 2025 ipl retention ms dhoni

அது தற்போது நீக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த விதியை சிஎஸ்கே மீண்டும் கொண்டுவர வலியுறுத்தி இருக்கிறது. இதன் மூலம் இந்த விதியை பயன்படுத்தி தோனியை குறைந்த விலைக்கு தக்க வைத்து ஏலத்தில் பணத்தை வைத்து மற்ற வீரர்களை வாங்கலாம் என்பது தான் சிஎஸ்கே வின் திட்டமாகும்.

இன்னும் தோனியை இந்திய அணிக்காக விளையாடாத வீரர் என்ற வரிசையில் சேர்த்தால் உண்மையாகவே இந்திய அணிக்கு விளையாடாத ஒரு வீரரின் இடம் பறிபோகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.பல சாதனைகளைப் படைத்த தோனியை தக்க வைக்க வேண்டும் என்பதற்காக வாய்ப்புக்காக காத்திருக்கும் வீரரின் இடத்தை சிஎஸ்கே பறிக்க வேண்டுமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

தோனி போன்ற ஜாம்பவான் வீரர்களை இந்த விதியை பயன்படுத்தி அவர்களுடைய மரியாதையை குறைக்க வேண்டாம் என்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.சிஎஸ்கே வின் இந்த நகர்வை பின்பற்றி இனிவரும் காலங்களில் ஒவ்வொரு அணியும் இதை செய்தால் பல இளம் வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும் என்று அச்சம் எழுந்துள்ளது.

இதனால் இந்த விதியை மீண்டும் கொண்டு வரக்கூடாது என பல கிரிக்கெட் வல்லுனர்களும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.இது தோனிக்கு மட்டுமல்லாமல் பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைத்து சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கும் இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, August 12, 2024, 7:30 [IST]
Other articles published on Aug 12, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+