Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: ஐபிஎல் அணிகளின் டாப் 10 ஜெர்சிகள்.. சிஎஸ்கே அணியின் மஞ்சள் ஜெர்சிக்கு எந்த இடம்?

சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள 10 ஐபிஎல் அணிகளின் ஜெர்சி உடைகள் எப்படி இருக்கின்றன, எந்த அணியின் உடை சிறப்பாக உள்ளது என்பது பற்றி சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன. அதன் அடிப்படையில் நாம் சிறந்த ஜெர்சிகளைத் தேர்ந்தெடுத்து மதிப்பெண் அளித்து இருக்கிறோம். அவற்றை இங்கே வரிசைப்படுத்தி இருக்கிறோம்.

1. 2025 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உடை முதல் இடத்தைப் பிடிக்கிறது. அந்த அணியின் கருநீல வண்ணம் மற்றும் தங்க நிறம் கொண்ட உடை ரசிகர்களை அதிக அளவில் ஈர்த்துள்ளது. அது எளிதில் அடையாளம் காணக்கூடிய உடையாகவும், அதே சமயம் குதிரைப்படை வீரர்கள் (நைட் ரைடர்ஸ்) என்பதன் பொருளுக்கு ஏற்ற வண்ணமாகவும் அந்த உடை உள்ளது.

IPL 2025 Team Jersey Ranking Which Team Has the Best Jersey

2. அடுத்ததாக இரண்டாம் இடம் பிடித்திருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மஞ்சள் நிற உடை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உடை பார்ப்பதற்கு பளிச்சென்று இருப்பதுதான் அதன் முதல் அடையாளமாகவே உள்ளது. அந்த அணியின் உடையில் இருக்கும் அதிக விளம்பரங்கள் மட்டுமே ஒரு சிறிய குறையாக உள்ளது. மற்றபடி இந்த மஞ்சள் நிற உடை ரசிகர்களின் மனதில் ஆழமாகவே பதிந்து விட்டது. இதை எந்த காலத்திலும் மாற்ற முடியாது என்பதே உண்மை. அதனால் இது இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

3.மூன்றாவது இடத்தைப் பிடிப்பது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆரஞ்சு மற்றும் கருப்பு நிற உடைதான். அந்த உடை பார்ப்பதற்கு சிறுத்தைப்புலியைப் பார்ப்பது போல இருக்கிறது. இது சில ரசிகர்களால் கேலி செய்யப்பட்டாலும், இது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு சிறந்த அடையாளமாக மாறிவிட்டது.

4. நான்காவது இடத்தைப் பிடிப்பது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. அந்த அணி சிவப்பு மற்றும் நீல நிற உடையை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இது பார்ப்பதற்கு குளிர்ச்சியாகவும், எளிமையாகவும் உள்ளது.

5. அடுத்ததாக ஐந்தாவது இடத்தைப் பிடிப்பது மும்பை இந்தியன்ஸ் அணியின் நீல நிற உடைதான். மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் நீண்ட காலமாகவே ஒரே உடையமைப்பை பின்பற்றி வருவது ரசிகர்கள் மத்தியில் ஆழமாகப் பதிந்து விட்டது.

6. அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நீலம் மற்றும் பிங்க் நிறம் கலந்த உடை ஆறாவது இடத்தைப் பிடிக்கிறது. இந்த அணி பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பிங்க் நிற உடையை தனியாகவும் வடிவமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

7. குஜராத் டைட்டன்ஸ் அணி ஏழாவது இடத்தைப் பிடிக்கிறது. அந்த அணியின் கருநீல வண்ண உடை ரசிகர்களை பெரிய அளவில் ஈர்க்கவில்லை.

8. டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் நீலம் மற்றும் சிவப்பு நிறம் கலந்த உடையானது எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதில் தனித்துவமாக ஏதும் இல்லை என்பதால் எட்டாம் இடத்தை பெற்றுள்ளது.

9. பஞ்சாப் கிங்ஸ் அணியின் சிவப்பு மற்றும் தங்க நிறம் கலந்த உடை ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது.

10. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் 2025 ஐபிஎல் தொடருக்கான ஜெர்சி இன்னும் அறிமுகம் செய்யப்படவில்லை. எனவே, அந்த அணிக்கு பத்தாவது இடம் அளிக்கப்பட்டுள்ளது.

Story first published: Saturday, March 22, 2025, 12:15 [IST]
Other articles published on Mar 22, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+