Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: எந்தெந்த கிரிக்கெட் வீரர்களின் பெயரில் பெவிலியன் இருக்கிறது.. இதை கவனச்சீங்களா?

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் என பத்து அணிகள் மோதுகின்றன. இந்த ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் உள்ளூர், வெளியூர் என்ற அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூர் போன்ற பல மைதானங்களில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில் கிரிக்கெட் என்பது இந்தியாவில் ஒரு மதம் போலவே விளங்கி வருகிறது. அந்த சூழலில் கிரிக்கெட் வீரர்களை கௌரவப்படுத்தும் விதமாக பிசிசிஐ மைதானத்தில் உள்ள பெவிலியன்களுக்கு வீரர்களின் பெயரை சூட்டுகிறது.

Virat kohli

அந்த வகையில் தற்போது நடைபெறும் ஐபிஎல் தொடரில் எந்தெந்த மைதானத்தில் எந்தெந்த வீரர்களின் பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம். மும்பை வான்கடே மைதானத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பெயரில் ஒரு பெவிலியன் இருக்கின்றது.

சச்சின் டெண்டுல்கர் தனது கடைசி டெஸ்ட் போட்டியை இந்த மைதானத்தில் தான் விளையாடினார். மும்பை கண்டெடுத்த தங்கமாக விளங்கும் சச்சின் டெண்டுல்கருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவருடைய ஐம்பதாவது பிறந்த நாள் 2023 ஆம் ஆண்டு முதல் மும்பை வான்கடே மைதானத்தில் சச்சின் டெண்டுல்கர் என கேலரிக்கு பெயரிடப்பட்டது.

இதே போன்று ரோகித் சர்மாவை மரியாதைப்படுத்தும் விதமாக அவருடைய பிறந்தநாள் அன்று வான்கடே மைதானத்தில் பெவிலியன் பெயர் வைக்கப்பட உள்ளது. இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி. கொல்கத்தாவில் பிரின்ஸ் என்று ரசிகர்களால் போற்றப்படும் கங்குலி இந்திய அணிக்கு பல நல்ல பெயர்களை பெற்றுக் கொடுத்திருக்கிறார்.

இந்தியாவை தாண்டி வெளிநாடுகளிலும் ஐசிசி தொடரிலும் இந்தியாவால் சாதிக்க முடியும் என்பதை கங்குலி தலைமையில் தான் உலகத்திற்கு நாம் செய்து காட்டினோம். இதனை போற்றும் விதமாக கங்குலிக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் அவருடைய பெயரில் ஒரு ஸ்டாண்ட் அமைக்கப்பட்டிருக்கிறது.

மேலும் கங்குலி பிசிசிஐ தலைவராகவும் பொறுப்பேற்று பல மாற்றங்களை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் இந்திய அணியின் ஒப்பற்ற வீரராக விளங்கிய ராகுல் டிராவிட், டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் என அனைத்துமே பத்தாயிரம் ரன்களுக்கு மேல் அடுத்து இருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து 2024 டி20 உலக கோப்பையை இந்தியாவில் முக்கிய காரணமாகவும் இருந்தார். இதனால் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ராகுல் டிராவிட்டின் பெயரில் ஒரு ஸ்டாண்ட் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் இந்திய அணியின் அதிரடி வீரர் சேவாக் இருக்கிறார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு முச்சதம் அடித்து சாதனை படைத்த ஷேவாக் உலகின் முன்னணி தொடக்க வீரராக திகழ்ந்தார். இதனால் அவரை பாராட்டி டெல்லி பிரோசா கோட்லா மைதானத்தில் அவருடைய பெயர் அமைக்கப்பட்ட ஒரு பகுதி இருக்கிறது. அதனை சேவாக் கேட் என்று அழைப்பார்கள். இதேபோன்று இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கௌதம் கம்பீர் பெயரிலும் டெல்லி மைதானத்தில் ஒரு ஸ்டாண்ட் இருக்கின்றது.

இந்திய அணிக்காக 2027 டி20 உலக கோப்பையையும்,2011 50 ஓவர் உலகக் கோப்பையின் வெல்ல முக்கிய காரணமாக கம்பீரும் இருந்தார். மேலும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகவும் தற்போது செயல்பட்டு வரும் கம்பீர் சாம்பியன்ஸ் கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் சர்வதேச டெஸ்ட் தர வரிசையில் நம்பர் ஒன் வீரராகவும் கம்பீர் இருந்திருக்கிறார். கம்பீரின் சேவைகளை பாராட்டி கடந்த நவம்பர் 2019 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள மைதானத்தில் கம்பீரின் பெயர் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் கிரிக்கெட் ஜாம்பவானும் இந்திய அணியின் தலைசிறந்த கேப்டனுமான தோனி இருக்கின்றார். இந்தியாவுக்காக 2007 டி20 உலக கோப்பை, 2011 50 ஓவர் உலகக் கோப்பை 2013 சாம்பியன்ஸ் தொடர் ஆகியவற்றை தோனி தலைமையில் தான் இந்தியா வென்றது. உலகின் சிறந்த கேப்டனாகவும் விளங்கி வரும் தோனி தனது 43-வது வயதிலும் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்.

சிஎஸ்கே அணிக்காக ஐந்து கோப்பைகளை வென்று கொடுத்த தோனி நடப்பாண்டு அன்கேப்டு வீரராக தான் களமிறங்கினார். எனினும் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து தோனி மீண்டும் கேப்டன் பொறுப்பை எடுத்துக் கொண்டார். தோனி பிறந்த ஊரான ராஞ்சியில் அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானத்தில் ஒரு ஸ்டாண்டுக்கு தோனியின் பெயர்தான் பொருத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பட்டியலில் ஏழாம் இடத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் ரசிகர்களால் கிங் என்று அழைக்கப்படும் விராட் கோலி தான் இருக்கின்றார். டெல்லியில் பிறந்து வளர்ந்த விராட் கோலி. அண்டர் 19 உலக கோப்பையை கேப்டனாக வென்று கொடுத்தார். அது மட்டும் இல்லாமல் டி20 உலக கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை ,இரண்டு முறை சாம்பியன்ஸ் கோப்பை என பல ஐசிசி கோப்பைகளையும் விராட் கோலி வென்றிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையும், சச்சினுக்கு பிறகு ஒட்டுமொத்த கிரிக்கெட்டிலும் அதிக சதம் அடித்த வீரர் என்ற பெயரும் கோலி தான் பெற்றிருக்கிறார்.

இதனால் கோலி விளையாடிக் கொண்டிருந்தபோதே டெல்லி கிரிக்கெட் மைதானத்தில் அவருக்கு என ஒரு ஸ்டாண்டை 2019 ஆம் ஆண்டு டெல்லி கிரிக்கெட் சங்கம் திறந்தது. இந்தப் பட்டியலில் எட்டாவது இடத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் இடம் பெற்றிருக்கிறார். அதிரடி வீரரான யுவராஜ் சிங் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்தவர். அதுமட்டுமல்லாமல் இந்திய அணி 50 ஓவர் உலகக் கோப்பை 2007 டி20 உலக கோப்பையில் வெல்ல முக்கிய காரணமாகவும் இருந்திருக்கிறார்.

பஞ்சாபின் மன்னன் என்று அழைக்கப்படும் யுவராஜ் சிங் பெயரில் தற்போது புதிதாக திறக்கப்பட்டுள்ள சந்திகார் மைதானத்தில் ஒரு ஸ்டாண்ட் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் ஹர்பஜன் சிங் இருக்கின்றார். ஹரபஜன்சிங் சர்வதேச கிரிக்கெட்டில் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டு களுக்கு மேல் வீழ்த்தியவர். இதைப் போன்று இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராகவும் விளங்கியவர். 2007 டி20 உலக கோப்பை, 2011 50 ஓவர் உலகக் கோப்பையும் யுவராஜ் உடன் இனைந்து ஹர்பஜன் வென்று இருக்கிறார். இந்தப் பட்டியலில் பத்தாம் இடத்தில் இந்தியனின் முன்னாள் கேப்டனும் கிரிக்கெட் ஜாம்பவானுமான கவாஸ்கர் இருக்கின்றார். மும்பை வான்கடே மைதானத்தில் கவாஸ்கர் பெயரிலும் ஒரு ஸ்டாண்ட் இருக்கின்றது.

Story first published: Wednesday, April 16, 2025, 21:55 [IST]
Other articles published on Apr 16, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+