For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

1040 வீரர்கள் நீக்கம்.. ஐபிஎல் ஏலத்தில் ட்விஸ்ட்.. அணிகள் கேட்டதால் மீண்டும் வந்த "சூப்பர் ஸ்டார்"

மும்பை: 2026 ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்னதாக பிசிசிஐ ஒரு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. ஏலத்தில் பங்கேற்கப் பதிவு செய்திருந்த வீரர்களின் பட்டியலைச் சுருக்கி, இறுதிப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 1000-க்கும் மேற்பட்ட வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்பதுதான் மிகப்பெரிய செய்தி. அதேசமயம், ஆரம்ப பட்டியலில் இல்லாத 35 வீரர்கள், அணிகளின் கோரிக்கையை ஏற்றுத் திடீரென சேர்க்கப்பட்டுள்ளனர்.

டிசம்பர் 16-ம் தேதி அபுதாபியில் உள்ள எதிஹாட் அரீனாவில் மினி ஏலம் நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி மதியம் 2:30 மணிக்கு ஏலம் தொடங்கும்.

IPL 2026 Auction 1040 Players Removed Quinton de Kock Added Last Minute Due to Franchise Request

இந்த ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க ஆரம்பத்தில் 1,390 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். ஆனால், 10 ஐபிஎல் அணிகளுடன் கலந்தாலோசித்த பிறகு, பிசிசிஐ இந்தப் பட்டியலை வெகுவாகக் குறைத்துள்ளது. சுமார் 75 சதவீதம் பேர், அதாவது 1040 வீரர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இறுதியாக 350 வீரர்கள் மட்டுமே ஏலப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இவர்களிலிருந்துதான் அணிகள் தங்களுக்குத் தேவையான வீரர்களைத் தேர்வு செய்யவுள்ளன.

திடீர் என்ட்ரி கொடுத்த டி காக்!

இந்த இறுதிப் பட்டியலில் மிகப்பெரிய ஆச்சரியம் தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர வீரர் குயின்டன் டி காக் சேர்க்கப்பட்டிருப்பதுதான். ஆரம்பகட்ட பட்டியலில் டி காக் பெயர் இல்லை. ஆனால், சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், விசாகப்பட்டினத்தில் சதம் அடித்து மிரட்டினார்.

இதையடுத்து, ஐபிஎல் அணி ஒன்று டி காக்கை ஏலத்தில் சேர்க்க வேண்டும் என்று பிசிசிஐ-யிடம் கோரிக்கை விடுத்தது. இதன் காரணமாக, விக்கெட் கீப்பர் பிரிவில் அவர் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளார். இவரது அடிப்படை விலை ரூ.1 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை ரூ.2 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இவரை வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற புது முகங்கள் யார்?

டி காக் மட்டுமல்லாமல், இலங்கை வீரர்கள் குசல் பெரேரா, துனித் வெல்லாலகே, பினுரா பெர்னாண்டோ ஆகியோரும் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து விஷ்ணு சோலங்கி உள்ளிட்ட 20 இந்திய வீரர்களும் இந்த ஆச்சரிய பட்டியலில் உள்ளனர்.

பிசிசிஐ விதிகளின்படி, முதலில் சர்வதேச அனுபவம் கொண்ட வீரர்கள் ஏலம் விடப்படுவார்கள். அதன்பிறகு உள்ளூர் வீரர்கள் வருவார்கள். முதல் செட்டில் (BA1) பிரித்வி ஷா, டேவிட் மில்லர், கேமரூன் கிரீன், டெவோன் கான்வே, ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் போன்ற அதிரடி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். வெங்கடேஷ் ஐயர் ஆல்-ரவுண்டர் பிரிவில் வருகிறார்.

முதல் 70 வீரர்களின் ஏலம் முடிந்த பிறகு, விரைவான ஏலம் ('Accelerated Auction) முறை அமல்படுத்தப்படும். அதாவது, அணிகள் குறிப்பிட்ட வீரர்களை மட்டும் கேட்டு, அவர்களை வேகமாக ஏலம் எடுக்கும் முறை இதுவாகும்.

மொத்தத்தில், தேவையில்லாத வீரர்களைக் கழித்துவிட்டு, தேவைப்படும் வீரர்களை மட்டும் வைத்துக்கொண்டு நடக்கப்போகும் இந்த மினி ஏலம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, December 9, 2025, 11:47 [IST]
Other articles published on Dec 9, 2025
English summary
IPL 2026 Auction: 1040 Players Removed, Quinton de Kock Added Last Minute Due to Franchise Request
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+