Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL Auction: டெல்லி கேப்பிட்டல்ஸ் வாங்கிய வீரர்கள்.. மில்லர், டக்கெட்.. ஜம்மு வீரருக்கு ஜாக்பாட்

அபுதாபி: ஐபிஎல் 2026 தொடருக்கான மினி ஏலத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் (DC) அணி வாங்கிய வீரர்கள் மற்றும் முழுமையான அணி விவரங்களை இங்கே காண்போம்.

ரூ.21.8 கோடி கையிருப்புடன் ஏலக் களத்தில் இறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, ஆரம்பத்திலிருந்தே மிகவும் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டது. இந்த ஏலத்தில் முதல் வீரரை வாங்கிய பெருமை டெல்லி அணியையே சேரும். தென்னாப்பிரிக்காவின் அதிரடி பினிஷர் டேவிட் மில்லரை அவரது அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு எந்தப் போட்டியுமின்றி டெல்லி தட்டித் தூக்கியது.

IPL 2026 Auction Delhi Capitals Full Squad Miller Duckett Bought Cheaply Jammu Player Auqib Nabi Dar Gets 8 4 Cr

அதேபோல, இங்கிலாந்து அதிரடித் தொடக்க வீரர் பென் டக்கெட்டையும் அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு வாங்கியது அந்த அணிக்குக் கிடைத்த மிகப்பெரிய லாபமாகும்.

சர்வதேச வீரர்களைக் குறைந்த விலையில் வாங்கிய டெல்லி அணி, ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் ஆகிப் நபி தார் என்பவருக்குப் பணத்தை வாரி இறைத்தது. வெறும் 30 லட்சம் அடிப்படை விலை கொண்ட இவரை வாங்க ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் கடும் போட்டி போட்டன. இறுதியில் ரூ.8.4 கோடி கொடுத்து டெல்லி அணி இவரைச் சொந்தமாக்கியது.

சமீபத்தில் நடந்த ரஞ்சி டிராபியில் 5 போட்டிகளில் 29 விக்கெட்டுகளையும், சையத் முஷ்டாக் அலி தொடரில் 7 போட்டிகளில் 15 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இவர் கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் முழு விவரம்:

ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் :

டேவிட் மில்லர் - ₹2 கோடி

பென் டக்கெட் - ₹2 கோடி

ஆகிப் நபி தார் - ₹8.4 கோடி

பதும் நிசாங்கா - ₹4 கோடி

லுங்கி நிகிடி - ₹2 கோடி

சாஹில் பராக் - ₹30 லட்சம்

பிரித்வி ஷா - ₹75 லட்சம்

கைல் ஜேமிசன் - ₹2 கோடி

தக்கவைக்கப்பட்ட மற்றும் டிரேட் செய்யப்பட்ட வீரர்கள்:

அக்சர் படேல் (கேப்டன்)
கே.எல். ராகுல்
குல்தீப் யாதவ்
மிட்செல் ஸ்டார்க்
டி. நடராஜன்
முகேஷ் குமார்
துஷ்மந்த சமீரா
அபிஷேக் போரல்
டிரிஸ்டன் ஸ்டப்ஸ்
கருண் நாயர்
சமீர் ரிஸ்வி
அசுதோஷ் சர்மா
விப்ராஜ் நிகம்
மாதவ் திவாரி
திரிபுரானா விஜய்
அஜய் மண்டல்
டிரேட் மூலம் வந்தவர்: நிதிஷ் ராணா (ராஜஸ்தான் ராயல்ஸில் இருந்து).

அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட முக்கிய வீரர்கள்:

பாப் டு பிளெஸ்ஸிஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், டோனோவன் ஃபெரீரா (ராஜஸ்தான் ராயல்ஸுக்கு டிரேட் செய்யப்பட்டார்), செடிகுல்லா அடல், மன்வந்த் குமார், மோகித் சர்மா, தர்ஷன் நல்கண்டே.

Story first published: Tuesday, December 16, 2025, 21:27 [IST]
Other articles published on Dec 16, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+