Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் வாங்கிய வீரர்கள் பட்டியல்.. வெறும் 1 கோடிக்கு திரும்பிய டி காக்

அபுதாபி: ஐபிஎல் 2026 தொடருக்கான மினி ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) அணி வாங்கிய வீரர்கள் மற்றும் முழுமையான அணி விவரங்களை இங்கே காண்போம். ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த மினி ஏலத்தில் மிகக்குறைந்த கையிருப்புத் தொகையான ரூ.2.75 கோடியுடன் மட்டுமே களமிறங்கியது.

கையில் பணம் குறைவாக இருந்தாலும், சாதுர்யமாகச் செயல்பட்ட மும்பை நிர்வாகம், தங்கள் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான குயின்டன் டி காக்கை வெறும் ரூ.1 கோடிக்கு வாங்கி அசத்தியுள்ளது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரியான் ரிக்கல்டனுக்கு இவர் ஒரு சிறந்த மாற்றாக இருப்பார் என்று கருதப்படுகிறது.

IPL 2026 Auction Mumbai Indians bought players Full Squad List De Kock Returns for Just 1 Crore

ஏலத்திற்கு முன்பே மும்பை இந்தியன்ஸ் அணி தனது முக்கியமான வீரர்களை தக்கவைத்திருந்தது. கேப்டன் ஹர்திக் பாண்டியா, ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ் என நட்சத்திர பட்டாளமே அணியில் உள்ளது. மேலும், ஷர்துல் தாக்கூர் (LSG), ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் (GT), மயங்க் மார்கண்டே (KKR) ஆகியோரை டிரேட் முறையில் அணிக்குள் கொண்டு வந்து பலப்படுத்தியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் (MI) அணியின் முழு விவரம்:

ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள்:

குயின்டன் டி காக் (ரூ. 1 கோடி)

டேனிஷ் மாலேவார் (ரூ. 30 லட்சம்)

முகமது இசார் (ரூ. 30 லட்சம்)

அதர்வா அன்கோலேகர் (ரூ. 30 லட்சம்)

மயங்க் ராவத் (ரூ. 30 லட்சம்)

தக்கவைக்கப்பட்ட மற்றும் டிரேட் செய்யப்பட்ட வீரர்கள்:

ஹர்திக் பாண்டியா
ரோஹித் சர்மா
சூர்யகுமார் யாதவ்
ஜஸ்பிரித் பும்ரா
திலக் வர்மா
டிரென்ட் போல்ட்
வில் ஜாக்ஸ்
தீபக் சஹார்
மிட்செல் சாண்ட்னர்
நமன் திர்
ரியான் ரிக்கல்டன்
ராபின் மின்ஸ்
கார்பின் போஷ்
அல்லாஹ் கசன்பர்
அஷ்வினி குமார்
ரகு சர்மா
ராஜ் அங்கத் பாவா

டிரேட் மூலம் வந்தவர்கள்: ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், மயங்க் மார்கண்டே, ஷர்துல் தாக்கூர்.

அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட முக்கிய வீரர்கள்:

முஜீப் உர் ரஹ்மான், ரீஸ் டாப்லி, கரண் சர்மா, லிசாட் வில்லியம்ஸ், பெவன் ஜேக்கப்ஸ், சத்யநாராயண ராஜு, கே.எல்.ஸ்ரீஜித், விக்னேஷ் புத்தூர். அர்ஜுன் டெண்டுல்கர் லக்னோ அணிக்கு டிரேட் செய்யப்பட்டுள்ளார்.

மிகக்குறைந்த பட்ஜெட்டில் களமிறங்கினாலும், குயின்டன் டி காக்கை வாங்கியதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் தனது பேட்டிங் வரிசையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. ரோஹித், சூர்யா, பாண்டியா, பும்ரா என ஒரு மூத்த வீரர்கள் படையே இருப்பதால், 2026 சீசனில் மும்பை இந்தியன்ஸ் மீண்டும் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

Story first published: Tuesday, December 16, 2025, 17:06 [IST]
Other articles published on Dec 16, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+