Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: ஒரு விக்கெட்டுக்கு இத்தனை கோடியா? பும்ரா உள்ளிட்ட 5 பவுலர்களின் மோசமான செயல்பாடு

மும்பை: ஐபிஎல் 2026 சீசனில், பல பந்துவீச்சாளர்களுக்கு பெரும் அளவு ஊதியம் வழங்கிய போதும், அவர்களின் செயல்பாடுகள் ஏமாற்றம் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. . ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, கேமரூன் கிரீன், யுஸ்வேந்திர சாஹல், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் ஒரு விக்கெட் எடுக்க அணி நிர்வாகம் எவ்வளவு சம்பளம் வழங்கி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ₹18 கோடிக்குத் தக்கவைக்கப்பட்ட போதிலும், வெறும் 4 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். இதன் மூலம் ஒரு விக்கெட்டுக்கு ₹4.50 கோடி செலவாகி, அணிக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்றொரு நட்சத்திர வீரரான ஹர்திக் பாண்டியா ₹16.35 கோடிக்கு வாங்கப்பட்டு, 4 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார். விக்கெட்டுக்கு ₹4.09 கோடி என்ற செலவு, உரிமையாளர் தரப்புக்கு தோல்வியாக அமைந்தது.

ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீனின் ₹25.20 கோடி ஒப்பந்தம் வெறும் 7 விக்கெட்டுகளையே தந்தது. ஒரு விக்கெட்டுக்கு ₹3.60 கோடி செலவானது. இது ஐபிஎல் வரலாற்றில் எந்தவொரு அணிக்கும் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்புகளில் ஒன்றாகப் பதிவானது.

யுஸ்வேந்திர சாஹல் ₹18 கோடிக்கு ஒப்பந்தமாகி 12 விக்கெட்டுகளையும், அக்ஸர் படேல் ₹16.50 கோடிக்கு 11 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இருவருக்கும் ஒரு விக்கெட்டுக்கு சராசரியாக ₹1.50 கோடி செலவாகி, எதிர்பார்த்த தாக்கத்தை முழுமையாக ஏற்படுத்தவில்லை.

இதேபோல், குல்தீப் யாதவ் ₹13.25 கோடிக்கு ஒப்பந்தமாகி 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒரு விக்கெட்டுக்கு ₹1.33 கோடி செலவானது. அர்ஷ்தீப் சிங் ₹18 கோடி முதலீட்டுக்கு 14 விக்கெட்டுகள் எடுத்தாலும், ஒரு விக்கெட்டுக்கு ₹1.29 கோடி செலவாகியது. இவர்களின் திறமைக்கும், ஊதியத்திற்கும் ஏற்ப விக்கெட் எடுக்கவில்லை. மேலும், முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக ஆடுகளம் மாறி இருப்பரே இதற்கு காரணம் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

Story first published: Tuesday, May 26, 2026, 13:06 [IST]
Other articles published on May 26, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+