சென்னை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனுக்கான ஆரம்பகட்ட பணிகளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முடுக்கி விட்டிருக்கின்றது. இதன் மூலம் பம்பரம் போல் சுற்றும் அந்த அணியின் நிர்வாகிகள், அடுத்த சீசனுக்கு எந்த வீரர்களை தேர்வு செய்யலாம். எந்த அணியில் இருந்து வீரர்களை வாங்கலாம் என்பது குறித்து முயற்சி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் லக்னோ அணி கடந்த சீசனில் புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தை பிடித்தது. ரிஷப் பண்ட் தலைமையிலான அந்த அணி எதிர்பார்த்து வெற்றியை பெற முடியவில்லை. இந்த தருணத்தில் அந்த அணியில் இருக்கும் ஒரு அதிவேகப்பந்துவீச்சாளரை விடுவிக்க அந்த அணி நிர்வாகம் முயற்சி செய்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா, லக்னோ அணி மயங்க் யாதவை விடுவிக்க வேண்டும். அவருக்கு 11 கோடி ரூபாய் கொடுத்து இருக்கிறார்கள். அவர் எப்போதெல்லாம் விளையாடுகிறாரோ, அப்போதெல்லாம் ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார்.
ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் மொத்தமாகவே அவர் நான்கு போட்டிகள் தான் விளையாடுகிறார். ஒருவரால் ஒரு சீசன் முழுமையாக விளையாட முடியவில்லை என்றால் அவருக்கு 11 கோடி ரூபாய் தேவையா? இதனால் அவரை விடுவித்து மீண்டும் வேண்டுமானால் வாங்கி கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்.
இதனால் மயங்க் யாதவை விடுவிக்க முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. ஒருவேளை அவர் ஏலத்தில் வந்தால் சிஎஸ்கே அணி அவர் எடுக்கலாமா என்று யோசித்து வருகிறது. ஆனால் மயங்க் யாதவ், அடிக்கடி காயம் அடையும் வீரராக இருப்பதால், அவர் மேல் ரிஸ்க் எடுக்க சிஎஸ்கே விரும்பவில்லை. ஒரு வேலை மயங்க் தேர்வு செய்து அவர் முழு சீசனும் விளையாடினார்.
U19 முத்தரப்பு தொடர்.. இந்திய அணியில் டிராவிட் மகனுக்கு வாய்ப்பு.. 14 வயது வைபவ் அணியில் இல்லை
அதைவிட ஒரு லக் வேறு எதுவும் சிஎஸ்கே அணிக்கு கிடைத்திருக்காது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோன்று ஆகாஷ் தீப் 8 கோடி ரூபாய்க்கு லக்னோ அணி வாங்கியுள்ளதால் அவரையும் விடுவிக்க வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.