Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கேக்கு எதிராக திரும்பிய தமிழக வீரர்கள்.. சாம்சன் விவகாரத்தில் RR அணியை தூண்டிவிடும் பத்ரிநாத்

மும்பை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலத்திற்கு முன்பு எந்த வீரரை தக்க வைக்கலாம்? எந்த வீரரை விடுவிக்கலாம் என்பது குறித்து ஒவ்வொரு அணிகளும் இறுதி கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் சிஎஸ்கே அணி ஜடேஜாவை கொடுத்துவிட்டு ராஜஸ்தான் அணியிடமிருந்து சஞ்சு சாம்சனை வாங்க முயற்சி செய்து வருகிறது.

எனினும் இதற்கு சிலர் வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்து இருக்கிறார்கள். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத், தற்போதைய சூழலில் ஜடேஜாவை விட பத்ரிநாத்துக்கு மதிப்பு அதிகம். எனவே ராஜஸ்தான் கேட்பது சரிதான்.

Badrinath on csk

இதனால் தான் ஜடேஜாவை தவிர மேலும் ஒரு வீரர் எங்களுக்கு தாருங்கள் என ராஜஸ்தான் அணி கேட்கிறது. நான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிர்வாகியாக இருந்தால் நிச்சயமாக சஞ்சு சாம்சனுக்கு பதில் இரண்டு வீரர்களை கேட்டு வாங்கி இருப்பேன். ஜடேஜாவுக்கு வயதாகி வருகிறது.

எனவே அவருடைய கிரிக்கெட் தரம் நாளுக்கு நாள் சரிந்து கொண்டுதான் செல்லும். ஆனால் சஞ்சு சாம்சன் இளம் வீரர். அவருக்கு இன்னும் நிறைய கிரிக்கெட் எஞ்சி இருக்கிறது. நான் ராஜஸ்தான் அணியில் இருந்து ஜடேஜாவை வாங்கினால் கண்டிப்பாக பிரவீஸ் உள்ளிட்ட வீரர்களையும் கேட்பேன். தோனி, ஜடேஜா வீரர்கள் சிஎஸ்கேவுக்காக கூட்டணி அமைத்து நிறைய போட்டிகளை வெற்றி தேடித் தந்திருக்கிறார்கள்.

முதலில் இந்த விஷயத்தில் தோனி என்ன சொல்கிறார் என்பது முக்கியமாக இருக்கிறது. சஞ்சு சாம்சனுக்கு பதில் ஜடேஜாவை கொடுப்பது குறித்து சிஎஸ்கே அணி ஒரு முறை அல்ல 100 முறையாவது யோசித்து இருக்கும். ஏன் ஏனென்றால் ஜடேஜா மீது அவ்வளவு நம்பிக்கையை தோனி வைத்திருக்கிறார்.

சிஎஸ்கேவுக்கு பல போட்டிகளை அவர் வென்று தந்திருக்கின்றார். இன்னும் சொல்லப்போனால் இப்போது இருக்கும் ஜடேஜாவை உருவாக்கியது தோனி தான். தோனியின் வழிகாட்டுதலின்படி தான் ஜடேஜா தற்போது இவ்வளவு பெரிய வீரராக மாறி இருக்கிறார். எனவே இது ஒரு கடினமான விஷயமாகத்தான் இருக்கும். இது தொடர்பாக சிஎஸ்கே அணிக்குள் பல விவாதங்கள் நடந்திருக்கும் என்று பத்ரிநாத் கூறியுள்ளார்.

Story first published: Monday, November 10, 2025, 21:39 [IST]
Other articles published on Nov 10, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+