Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: சேப்பாக்கத்தில் மிரள வைத்த சிஎஸ்கே பவுலர்கள்.. சிஎஸ்கே சுழலில் சிக்கிய மும்பை இந்தியன்ஸ்!

சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் மிக முக்கியமான ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்ஸ்மேன்களை தங்களது சுழல் மற்றும் வேகத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சாளர்கள் வீழ்த்தினர். அதிரடிக்கு பெயர் போன மும்பை இந்தியன்ஸ் அணி, சிஎஸ்கே-வின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 159 ரன்களுக்கு சுருண்டது எப்படி? மைதானத்தில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்ப்போம்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். ஆனால், அவரது எதிர்பார்ப்பை சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்திலேயே தவிடுபொடியாக்கி விட்டனர். ஆட்டத்தின் 2வது ஓவரிலேயே அதிரடி தொடக்க வீரர் வில் ஜாக்ஸ் 1 ரன்னில் அன்ஷுல் கம்போஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அதன் பின் இணைந்த ரியான் ரிக்கல்டன் மற்றும் நமன் திர் ஜோடி சற்று நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது.

IPL 2026 CSK vs MI CSK Bowlers Stun Mumbai Indians and Restricts them to 159 at Chepauk

ரிக்கல்டன் 24 பந்துகளில் 5 சிக்சர்களுடன் 37 ரன்கள் எடுத்து நூர் அகமது சுழலில் சிக்கினார். ஆபத்தான பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் 12 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ராமகிருஷ்ணா கோஷ் பந்துவீச்சிலும், திலக் வர்மா 5 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

ஒருபுறம் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தாலும், மறுபுறம் நமன் திர் தனி ஆளாக நின்று கடுமையாக போராடினார். அவர் 37 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்களுடன் 57 ரன்கள் குவித்து ஜேமி ஓவர்டன் பந்துவீச்சில் அவுட்டானார். பொறுப்புடன் விளையாட வேண்டிய கேப்டன் ஹர்திக் பாண்டியா 23 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 18 ரன்கள் மட்டுமே எடுத்து மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியில் டிரென்ட் போல்ட் 2 பந்துகளில் 7 ரன்கள் எடுக்க, மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.

மும்பை இந்தியன்ஸ் அணியை இவ்வளவு குறைந்த ஸ்கோருக்கு கட்டுப்படுத்தியதில் சிஎஸ்கே பந்துவீச்சாளர்களின் ஆக்ரோஷமான பந்துவீச்சே முக்கிய காரணம். சொந்த மண்ணின் ஆடுகள தன்மையை மிகச்சரியாக புரிந்து கொண்டு செயல்பட்ட சிஎஸ்கே பவுலர்கள், மும்பை பேட்ஸ்மேன்களுக்கு எந்த இடத்திலும் பெரிய ஷாட்களை ஆட வாய்ப்பு கொடுக்கவில்லை. குறிப்பாக இளம் வேகப்பந்து வீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் 4 ஓவர்கள் வீசி 32 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

அவருக்கு துணையாக சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது தனது சுழலில் மும்பை வீரர்களை திணறடித்து 4 ஓவர்களில் 26 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அறிமுக வீரராக களமிறங்கிய ராமகிருஷ்ணா கோஷ் 3 ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டையும், ஜேமி ஓவர்டன் மிக நேர்த்தியாக பந்துவீசி 4 ஓவர்களில் 23 ரன்கள் மட்டும் கொடுத்து 1 விக்கெட்டையும் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணியின் ரன் வேட்டையை முழுமையாக தடுத்து நிறுத்தினர்.

Story first published: Saturday, May 2, 2026, 21:36 [IST]
Other articles published on May 2, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+