IPL 2026: கஜா வரான் டா! கண்கள் ரெண்டும் தீ பறக்க கஜா வரான் டா! MI தோல்விக்கு பின் ஹர்திக் முடிவு
மும்பை: ஐபிஎல் 2026 சீசனில் மும்பை இந்தியன்ஸ்அணியின் வீரர் ஹர்திக் பாண்டியா, டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான முந்தைய போட்டியில் பங்கேற்கவில்லை. இந்த சூழலில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான அடுத்த போட்டிக்கு முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை இரவு கவுகாத்தியில் அவர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டார்.
டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில், கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் கேப்டன் பொறுப்பை சூர்யகுமார் வகித்தார். ஹர்திக் இல்லாததால், தீபக் சாகர், கார்பின் போஷ் ஆகியோர் அணியில் இணைந்தனர். நான்கு வெளிநாட்டு வீரர் எண்ணிக்கையை உறுதி செய்ய, ட்ரென்ட் போல்ட்டுக்குப் பதிலாக போஷ் களமிறக்கப்பட்டார்.

பயிற்சி அமர்வில் ஹர்திக் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார். இது அவர் மீண்டும் களமிறங்குவார் என்பதற்கான அறிகுறியாக பார்க்க. வார்ம்-அப் செய்தபின், காலியான வலைப்பயிற்சி கூடத்தில் பந்துவீசத் தொடங்கி, தனது யார்க்கர்களை நல்ல வேகத்தில் துல்லியமாக வீசினார்.
அணியின் பிசியோதெரபிஸ்ட் நிதின் பட்டேலிடம், இந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை முதல் தான் யார்க்கர் பயிற்சி மேற்கொள்வதாகக் கூறினார். "யார்க்கர்களைச் சரியாக வீச முடிந்தால், மற்ற பந்துகள் மிக எளிதாகிவிடும்," என்றும் ஹர்திக் தெரிவித்தார்.
பேட்டிங் பயிற்சியாளர் கிரண் பொல்லார்ட் அருகில் நின்று கவனிக்க, ஹர்திக் வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்தார். பெரும்பாலும் பந்துகள் பேட் நடுவில் சரியாகப் பட்டு, இனிமையான சத்தத்துடன் வெளியேறின. இதனால் பொல்லார்டும் ஊக்கமளிக்கும் விதமாகத் தலையசைத்தார்.
நடப்பு சீசனின் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக ஹர்திக் மூன்று ஓவர்களில் 39 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். மேலும், 11 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 18 ரன்கள் எடுத்தார். மும்பை இந்தியன்ஸ் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. எனினும், இரண்டாவது ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸிடம் அணி தோல்வியடைந்தது.


Click it and Unblock the Notifications