Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: மும்பை இந்தியன்ஸ்-இல் அடுத்த சர்ச்சை.. பயிற்சியாளருக்கு எதிராக வீடியோ வெளியிட்ட ஹர்திக்

மும்பை: 2026 ஐபிஎல் தொடரில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் மும்பை இந்தியன்ஸ் அணியில் தற்போது அடுத்த பூகம்பம் வெடித்துள்ளது. அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கும் அணி நிர்வாகத்திற்கும் இடையே ஏதோ பனிப்போர் நடப்பதாக ரசிகர்கள் தற்போது சந்தேகிக்க தொடங்கியுள்ளனர். ஹர்திக் பாண்டியாவிற்கு காயம் என பயிற்சியாளர் ஒருபுறம் கூற, மறுபுறம் தான் வலைப்பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை வெளியிட்டு ஹர்திக் பாண்டியா புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். மும்பை அணியில் உண்மையாகவே என்ன நடக்கிறது, இந்த வீடியோ விவகாரத்தின் பின்னணி என்ன என்பதை விரிவாகப் பார்ப்போம்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் மகிளா ஜெயவர்தனே சமீபத்தில் ஊடகங்களிடம் பேசுகையில், ஹர்திக் பாண்டியாவிற்கு முதுகில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், மருத்துவக் குழுவினர் அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், கடந்த சில நாட்களாகவே அவரால் எவ்வித பயிற்சியிலும் ஈடுபட முடியவில்லை என்றும், காயம் காரணமாகவே அவரை களமிறக்கவில்லை என்றும் கூறினார்.

IPL 2026 Hardik Pandya Practice Video Sparks New Row Contradicts Coach Mahela Jayawardene s Injury Claim

ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் இப்படி கூறிய சில மணி நேரங்களிலேயே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் வலைப்பயிற்சியில் மிக தீவிரமாக பேட்டிங் செய்யும் இரண்டு வீடியோக்களை வெளியிட்டு ஹர்திக் பாண்டியா அதிர வைத்துள்ளார். இது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மத்தியில் சந்தேகத்தை கிளப்பி உள்ளது.

பயிற்சியாளரின் பேச்சிற்கும், ஹர்திக் பாண்டியாவின் செயலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாததால் மும்பை அணியின் உள்விவகாரங்களில் பெரும் குழப்பம் நிலவுவது அப்பட்டமாகத் தெரிகிறது. இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 8 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் தவிக்கிறது 5 முறை சாம்பியனான மும்பை அணி. தரம்சாலாவில் நாளை நடைபெற உள்ள பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்காக மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் அனைவரும் புறப்பட்டுச் சென்ற நிலையில், ஹர்திக் பாண்டியா மட்டும் அவர்களுடன் செல்லவில்லை.

அவர் காயம் காரணமாக வரவில்லையா அல்லது அணி நிர்வாகத்துடனான அதிருப்தியில் விலகி இருக்கிறாரா என்ற மிகப்பெரிய கேள்வி கிரிக்கெட் வட்டாரத்தில் எழுந்துள்ளது. அவருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் தற்காலிக கேப்டனாக செயல்பட்டு வருகிறார். 32 வயதான ஹர்திக் பாண்டியாவின் உடல்நிலையை மும்பையில் உள்ள மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருவதாகவும், போட்டிக்கு முன்பாக அவர் தரம்சாலா வர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

2026 ஐபிஎல் தொடர் ஹர்திக் பாண்டியாவிற்கு ஒரு மிக மோசமான தொடராகவே அமைந்துள்ளது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 136.44 ஸ்ட்ரைக் ரேட்டுடன் வெறும் 146 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். பந்துவீச்சிலும் 11.9 என்ற மோசமான எக்கானமியுடன் 4 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். கடந்த ஆண்டு பிளே ஆப் சுற்று வரை சென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த ஆண்டு முதல் அணியாக வெளியேறியுள்ளது. ஒருபுறம் மோசமான ஃபார்ம், மறுபுறம் தொடர் தோல்விகள் என தவித்து வந்த ஹர்திக் பாண்டியா மீண்டும் அணிக்கு திரும்புவாரா? அவரது கேப்டன் பதவி நீடிக்குமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

Story first published: Wednesday, May 13, 2026, 10:41 [IST]
Other articles published on May 13, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+