Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: சூர்யகுமார் யாதவுக்கு டாட்டா பைபை? மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் கடும் அதிருப்தி

மும்பை: 2026 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சந்தித்து வரும் தொடர் தோல்விகளுக்கு மத்தியில், அந்த அணியின் முக்கிய வீரர் சூர்யகுமார் யாதவின் மோசமான ஃபார்ம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. உலகத்தரம் வாய்ந்த பேட்டர் என்று புகழப்படும் சூர்யகுமார் யாதவின் ஆதிக்கம் இப்போது முடிவுக்கு வருகிறதா என்ற அச்சமும், கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி 243 ரன்களைக் குவித்தபோதும், அதில் சூர்யகுமாரின் பங்களிப்பு மிகவும் ஏமாற்றமளிக்கும் வகையில் அமைந்தது.

வான்கடே மைதானத்தில் கடந்த ஏப்ரல் 29 அன்று நடைபெற்ற போட்டியில், ரையான் ரிக்கல்டன் சதம் விளாசி மும்பை அணிக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார். அந்தச் சூழலில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், தனது அதிரடியால் ஸ்கோரை இன்னும் உயர்த்தியிருக்க வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக 5 பந்துகளில் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஈஷன் மலிங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இமாலய இலக்கைத் துரத்தக்கூடிய ஹைதராபாத் போன்ற பலமான அணிக்கு எதிராக, சூர்யகுமார் போன்ற ஒரு மூத்த வீரர் பொறுப்பின்றி ஆட்டமிழந்தது மும்பை ரசிகர்களை அதிருப்தியடையச் செய்துள்ளது.

IPL 2026 Is Suryakumar Yadav s Era Ending Fans Frustrated as MI Star Struggles in IPL 2026 Season Performance

இந்த சீசனில் சூர்யகுமார் யாதவின் புள்ளிவிவரங்கள் மிகவும் கவலைக்கிடமாக உள்ளன. இதுவரை 8 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர் 162 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அவரது சராசரி 20.25 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 140.87 ஆக சரிந்துள்ளது. மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தைச் சிதறடிக்கும் அவரது '360 டிகிரி' ஆட்டம் இந்த சீசனில் எடுபடவில்லை. குறிப்பாக அவரது கடைசி 6 இன்னிங்ஸ்களில் 6, 33, 0, 15, 36 மற்றும் 5 என ரன்கள் எடுத்துள்ளார். ஒரு போட்டியில் கூட அவர் ஆட்டத்தின் போக்கை மாற்றும் வகையிலான இன்னிங்ஸை ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் சூர்யகுமார் யாதவ் மீது ரசிகர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். "சூர்யகுமார் யாதவ் காலம் முடிந்துவிட்டதா?" என்றும், "அவரால் இனி பழையபடி அதிரடி காட்ட முடியாதா?" என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒருபுறம் விமர்சனங்கள் குவிந்தாலும், மற்றொருபுறம் அவருக்கு ஆதரவான குரல்களும் ஒலிக்கின்றன. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் கீரான் பொல்லார்டை பின்னுக்குத் தள்ளி 2-வது இடத்தைப் பிடிக்க சூர்யகுமாருக்கு இன்னும் 9 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் சூர்யகுமார் யாதவைச் சுற்றியே கட்டமைக்கப்பட்டுள்ளது. அவர் தொடர்ந்து சொதப்புவது அணியின் வெற்றி வாய்ப்பைப் பாதிப்பதோடு, அவரது இந்திய டி20 அணி எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. வரும் போட்டிகளில் அவர் மீண்டும் தனது பழைய ஃபார்முக்குத் திரும்புவாரா அல்லது இந்தச் சரிவு தொடருமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இக்கட்டான சூழலில் இருக்கும் மும்பை அணிக்கு சூர்யகுமாரின் அதிரடி இப்போது மிக அவசியமான ஒன்றாக உள்ளது.

Story first published: Thursday, April 30, 2026, 11:33 [IST]
Other articles published on Apr 30, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+