Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: கேஎல் ராகுலை வாங்க துடிக்கும் கேகேஆர் அணி.. மினி ஏலத்திற்கு முன்பே பலே திட்டம்

கொல்கத்தா: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனுக்கு முன்பு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கே எல் ராகுலை வாங்க முயற்சி எடுத்து வருவது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்திருக்கின்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக ரகானே செயல்பட்டார்.

இதில் கொல்கத்தா அணி 14 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி 7 தோல்வி என 12 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தையே பிடித்தது. இதனால் கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் அந்த அணியை விட்டு வெளியேறிவிட்டார்.

KL Rahul

தற்போது ரஹானேவின் கேப்டன் பணியும் கொல்கத்தா அணி நிர்வாகிகளுக்கு திருப்தியை தரவில்லை. மேலும் 23 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்ட வெங்கடேஸ் ஐயரும் பெரிய அளவு சோபிக்கவில்லை. இதனால் தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராகுலை ஏலத்திற்கு முன்பே வாங்க முடிவெடுத்து இருப்பதாக செய்திகள் வெளியாகிறது.

அதற்கு பதில் ரகானே, வெங்கடேஷ் ஐயர் உள்ளிட்ட வீரர்களை கொடுத்துவிட்டு ராகுலை பெற கே கே ஆர் அணி நிர்வாகம் முடிவெடுத்திருக்கின்றது. இதனைத் தொடர்ந்து ராகுலை கொல்கத்தா அணியின் புதிய கேப்டனாக நியமிக்க அந்த அணி நிர்வாகம் முடிவெடுத்து இருக்கின்றது.

நடந்து முடிந்த சீசனில் டெல்லிக்காக 13 போட்டிகள் விளையாடிய ராகுல் 539 ரன்கள் அடித்தார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரெட் 149 என்று அளவிலும், சராசரி 53 என்ற அளவிலும் மிரட்டலாக இருந்தது. ஆனால் ராகுல் அனுபவ வீரராக இருந்தும் அவருக்கு கேப்டன் பதவியை வழங்காமல் அக்சர் பட்டேலுக்கு டெல்லி அணி நிர்வாகம் கேப்டன் பதவியை வழங்கியது.

அப்போதே விவாதத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக கேப்டன் பதவி தருகிறோம் வாருங்கள் என கொல்கத்தா அணி அழைத்திருப்பது ராகுலுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்திருக்கின்றது. தற்போது ராகுலுக்கு 33 வயது ஆகிறது. ராகுலை வைத்து நான்கு ஆண்டுகள் அணியை கட்டமைத்து நடத்தலாம் என்ற முடிவில் தற்போது கே கே ஆர் அணி இருக்கின்றது. இதனால் ஐபிஎல் 2021 ஆம் ஆண்டு சீசன் பல மாற்றங்களை சந்திக்கும் என எதிர்பார்க்கலாம்.

Story first published: Thursday, July 31, 2025, 23:30 [IST]
Other articles published on Jul 31, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+