Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் ஓவரிலேயே இவ்ளோ ரன்னா? பிரம்மாண்ட சாதனை படைத்த ஃபின் ஆலன்.. ஐபிஎல் 2026-ல் புதிய ரெக்கார்ட்

கொல்கத்தா: 2026 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி தொடக்க வீரர் ஃபின் ஆலன் முதல் ஓவரிலேயே 24 ரன்கள் விளாசி பிரம்மாண்ட சாதனை படைத்தார். கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் 227 ரன்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி கொல்கத்தா அணி களமிறங்கியது.

இன்னிங்ஸின் முதல் ஓவரை ஹைதராபாத் வேகப்பந்து வீச்சாளர் டேவிட் பெய்ன் வீசினார். அந்த ஓவரில் ஸ்ட்ரைக்கில் நின்ற நியூசிலாந்து வீரர் ஃபின் ஆலன் வெறும் 5 பந்துகளைச் சந்தித்து 24 ரன்களை வாரிக்குவித்தார். மொத்தம் 7 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 28 ரன்கள் எடுத்து 2வது ஓவரில் ஹர்ஷ் துபே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். நடப்பு ஐபிஎல் ஏலத்தில் இவரை 2 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா அணி வாங்கியது குறிப்பிடத்தக்கது.

IPL 2026 KKR vs SRH Finn Allen Smashes 24 Runs in Opening Over to Break Sunil Narine s Record in IPL 2026

இந்த அதிரடியின் மூலம் ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா அணிக்காக முதல் ஓவரிலேயே அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். முன்னதாக 2018ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்கு எதிராக சுனில் நரைன் முதல் ஓவரில் 21 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை ஃபின் ஆலன் முறியடித்துள்ளார்.

ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் இன்னிங்ஸின் முதல் ஓவரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியல்:

யஷஸ்வி ஜெய்ஸ்வால் (ராஜஸ்தான்) - 26 ரன்கள்
ஃபின் ஆலன் (கொல்கத்தா) - 24 ரன்கள்
பிரித்வி ஷா (டெல்லி) - 24 ரன்கள்
யஷஸ்வி ஜெய்ஸ்வால் (ராஜஸ்தான்) - 22 ரன்கள்
சுனில் நரைன் (கொல்கத்தா) - 21 ரன்கள்
நமன் ஓஜா (ராஜஸ்தான்) - 21 ரன்கள்

ஃபின் ஆலன் அபாரமான தொடக்கத்தை கொடுத்தாலும் கொல்கத்தா அணி இந்தப் போட்டியில் படுதோல்வியையே தழுவியது. விக்கெட் கீப்பர் அங்குரிஷ் ரகுவன்ஷி அதிகபட்சமாக 52 ரன்களும், ரிங்கு சிங் 35 ரன்களும் எடுத்தனர். அஜிங்க்யா ரஹானே, கேமரூன் க்ரீன் உள்ளிட்ட முன்னணி பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 16 ஓவர்களில் 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஹைதராபாத் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பதிவு செய்தது.

Story first published: Friday, April 3, 2026, 6:00 [IST]
Other articles published on Apr 3, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+