For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL 2026:மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து வீரர்களை உருவிய சிஎஸ்கே..இத்தனை பெரிய லிஸ்டா? பாவம் அம்பானி

மும்பை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுக்கு தேவையான வீரர்களை பெரும்பாலும் வாங்கி விட்டார்கள். இந்த மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகத்தின் செயல்பாடு சிறப்பாக இருந்ததாக பல ரசிகர்களும் பாராட்டு தெரிவித்து இருந்தனர். இந்த சூழலில் ஐபிஎல் வரலாற்றிலே மிகவும் வெற்றிகரமான அணி என்றால் அது சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் தான்.

இரண்டு அணிகளுமே தலா ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார்கள். ஆனால் மும்பை அணி கடைசியாக 2020 ஆம் ஆண்டில் இருந்தும் சிஎஸ்கே அணி 2023 ஆம் ஆண்டிலிருந்து கோப்பையை இதுவரை வெல்லவில்லை.

IPL 2026

இந்த நிலையில் ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி தேர்வு செய்து தங்கள் அணிக்குள் விளையாட வைத்த பல வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உருவி இருக்கிறது. இந்த பட்டியலில் யார்? யார்? முதலில் மும்பை அணிக்காக விளையாடி பின் சிஎஸ்கே அணிக்காக தேர்வாகி இருக்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.

இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருப்பவர் பிராவோ. சிஎஸ்கே அணியின் சொத்தாக பார்க்கப்பட்ட பிராவோ, தவிர்க்க முடியாத ஒரு வீரராக விளங்கி வந்தார். இந்த நிலையில் பிராவோ முதல் முறையாக ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தான் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் ஆஷிஸ் நெஹ்ரா, சிஎஸ்கே அணிக்காக விளையாடுவதற்கு முன்பே மும்பை அணியில் சில காலம் இருந்தார்.
அதன்பின் தான் சிஎஸ்கே அணி அவரை தட்டித் தூக்கியது.

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் டிவைன்
ஸ்மித், வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரரான ஸ்மித் மும்பை அணிக்காக தான் தொடக்க வீரராக களமிறங்கி வந்தார். அதன் பிறகு சிஎஸ்கே அணி அவரை வாங்கிக் கொண்டது. இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் ரஹானே இருக்கிறார். ரஹானே சிஎஸ்கே அணியின் முக்கிய வீரராக இருந்தார்.

ஆனால் அவர் மும்பை அணிக்காக விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் வங்கதேச வீரர் முஸ்தபிசூர் ரஹ்மான் இருக்கின்றார். இவரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி சிறப்பாக செயல்பட்டதை அடுத்து சிஎஸ்கே அணி அவரை இழுத்தது.
இந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் ஹர்பஜன் சிங் இருக்கின்றார்.

ஹரபஜன் சிங் மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டனாகவே செயல்பட்டு இருக்கிறார். அதன் பின் தான் சிஎஸ்கே அணிக்குள் வந்தார். இந்த பட்டியலில் ஏழாவது இடத்தில் அம்பத்தி ராயுடு இருக்கின்றார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் கோப்பைகளை வென்று தந்த ராயுடு சிஎஸ்கே அணியில் தவிர்க்க முடியாத சொத்தாக மாறினார். இந்த பட்டியலில் எட்டாவது இடத்தில் கரன்சர்மா இருக்கின்றார்.

இவரும் மும்பை அணிக்காக விளையாடிய பின் சிஎஸ்கேவுக்கு வந்தார். இந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் ராபின் உத்தப்பா இருக்கின்றார். உத்தப்பா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பல காலம் விளையாடினார். அதன்பின் சிஎஸ்கே அணியில் முக்கிய வீரர்கள் தான் இந்த பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கின்றார்.

நியூசிலாந்து சேர்ந்த இவர் சிஎஸ்கே அணிக்கு விளையாடுவதற்கு முன்பே மும்பையில் தனது திறமையை நிரூபித்து இருந்தார். இந்த பட்டியலில் 11வது இடத்தில் இந்திய இளம் வீரர் அன்சூல் காம்போஜ் இருக்கின்றார். இவரை முதலில் மும்பை இந்தியன்ஸ் அணிதான் கண்டுபிடித்தது. அதன் பிறகு ஏலம் மூலம் சிஎஸ்கே அணிக்கு வந்தார். இந்த பட்டியலில் 12வது இடத்தில் தென்னாப்பிரிக்கா வீரர் டிவால்ட் பிரவிஸ் இருக்கின்றார்.

இவரையும் மும்பை அணி தான் ஆரம்பத்தில் கண்டறிந்தது. தற்போது அவர் சிஎஸ்கே வில் விளையாடுகிறார். இந்த பட்டியலில் 13வது இடத்தில் ராகுல் சாகர் இருக்கின்றார். இவரும் ஆரம்ப காலகட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். தற்போது இந்த ஏலம் மூலம் சிஎஸ்கே அணிக்குள் வந்திருக்கிறார்.

Story first published: Thursday, December 18, 2025, 14:39 [IST]
Other articles published on Dec 18, 2025
English summary
IPL 2026- List of Players CSK selected from Mumbai Indians in history
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+