IPL 2026- ரூ.18 கோடி போச்சா! 8 பந்துகள் வீசிய நிலையில் பதிரானா மீண்டும் காயம்.. தப்பித்த சிஎஸ்கே
ஐபிஎல் 2026 சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியின் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானா எட்டு பந்துகளை மட்டுமே வீசிய நிலையில், காயம் காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறினார். டி20 உலகக் கோப்பை பின்னடைவுக்குப் பிறகு, அவர் மீண்டும் களமிறங்கிய சிறிது நேரத்திலேயே இந்த காயம் ஏற்பட்டது.
ரூ. 18 கோடிக்கு KKR அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட பதிரானா, இந்த சீசனில் முதல் முறையாக ஆடினார். பிப்ரவரியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது கடைசி போட்டியில் விளையாடிய அவர், சரியாக மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் களத்துக்குத் திரும்பினார்.

இம்பாக்ட் பிளேயராக களமிறங்கிய பதிரானா, தனது முதல் ஓவரில் 7 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இரண்டாவது ஓவரின் முதல் பந்தை வீசும்போது தொடைத்தசையில் அசௌகரியத்தை உணர்ந்து கீழே விழுந்தார். மருத்துவ சிகிச்சை பெற்ற பின், முழு வேகத்தில் பந்துவீச முடியாமல், கேப்டன் அஜிங்க்யா ரஹானேவுடன் பேசிய பின் அங்கிருந்து விலகினார்.
முன்னதாக, டி20 உலகக் கோப்பையின் போதும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பதிரானா காயம் காரணமாக பாதியிலேயே விலகினார். ஐபிஎல்-க்கு வருவதற்கு முன், இலங்கை கிரிக்கெட் வாரியம் அவரது முழங்கால் காயம் தொடர்பான உடற்தகுதி சோதனைகளை கட்டாயப்படுத்தியது.
இது KKR அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு. ஏற்கனவே ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா ஆகியோர் காயத்தால் விலக்கப்பட்ட நிலையில், வருண் சக்கரவர்த்தியும் காயமடைந்துள்ளார். பதிரானாவின் தொடர்ச்சியான காயம் அவரது ஃபார்ம் மற்றும் அணியின் எதிர்காலத்திற்கு கவலையை அளிக்கிறது. ஏற்கனவே இவருடைய உடல்தகுதி மற்றும் பந்துவீச்சை காரணம் காட்டி சிஎஸ்கே அணி மினி ஏலத்திற்கு முன்பு விடுவித்த நிலையில், தற்போது அவர் 2 ஓவர் கூட வீச முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications

