Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: ஹர்பஜனின் 15 ஆண்டுகால சாதனை உடைந்தது.. மும்பை இந்தியன்ஸ் வரலாற்றில் சாதனை படைத்த கஜான்ஃபர்

மும்பை: 2026 ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் அல்லாஹ் கஜான்ஃபர் மாபெரும் சாதனையைப் படைத்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக ஜாம்பவான் ஹர்பஜன் சிங்கின் வசம் இருந்த ஒரு அரிய சாதனையை, தனது அபாரமான பந்துவீச்சால் இந்த ஆப்கானிஸ்தான் வீரர் தகர்த்தெறிந்துள்ளார்.

லக்னோ அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில், 3-வது ஓவரிலேயே லக்னோ அணியின் தொடக்க வீரர் ஜோஷ் இங்கிலிஸை வீழ்த்தி மும்பை அணிக்குத் திருப்புமுனையைக் கொடுத்தார் கஜான்ஃபர். அவர் வீசிய சாதுர்யமான 'கேரம் பால்' பந்தை இங்கிலிஸ் எதிர்கொள்ள முடியாமல் திணறினார். பந்து பேட்டின் விளிம்பில் பட்டு மேலே எழும்ப, மிட்-ஆன் திசையில் நின்றிருந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் பின்னோக்கி ஓடிச் சென்று ஒரு அற்புதமான கேட்ச்சை பிடித்தார். இதன் மூலம் ஜோஷ் இங்கிலிஸ் 13 ரன்களில் வெளியேறினார்.

IPL 2026 MI vs LSG Allah Ghazanfar Shatters Harbhajan Singh s 15-Year-Old Record in MI vs LSG IPL 2026 Clash

இந்த விக்கெட்டின் மூலம், ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் பவர்பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் சுழற்பந்து வீச்சாளர் என்ற வரலாற்றுச் சாதனையை அல்லாஹ் கஜான்ஃபர் படைத்துள்ளார். இதற்கு முன்பு 2011 ஆம் ஆண்டு சீசனில் ஹர்பஜன் சிங் பவர்பிளே ஓவர்களில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. தற்போது 2026 சீசனில் தனது 6-வது பவர்பிளே விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், 15 ஆண்டுகால ஹர்பஜனின் சாதனையை கஜான்ஃபர் முறியடித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி பல சவால்களைச் சந்தித்து வந்தாலும், கஜினஃபரின் பந்துவீச்சு அந்த அணிக்கு ஒரு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. இதுவரை மும்பை அணிக்காகப் பவர்பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஜஸ்பிரித் பும்ரா 40 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக லசித் மலிங்கா 37 விக்கெட்டுகளும், டிரெண்ட் போல்ட் 31 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர். இந்த நிலையில், ஒரு சுழற்பந்து வீச்சாளராக இத்தகைய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இணையாகப் பவர்பிளேயில் விக்கெட்டுகளைக் குவிப்பது என்பது சாதாரணமான விஷயம் அல்ல.

தற்போது 2026 ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் அதிக விக்கெட் வீழ்த்தியவராகவும் கஜான்ஃபர் உருவெடுத்துள்ளார். ஹர்பஜன் சிங், முனாப் படேல் போன்ற ஜாம்பவான்களின் சாதனைகளை இந்த 18 வயது இளம் வீரர் முறியடித்து வருவது, மும்பை ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹர்திக் பாண்டியா இல்லாத இந்த போட்டியில், கஜினஃபரின் இந்த அதிரடித் தொடக்கம் மும்பை அணிக்கு வெற்றிக்கான நம்பிக்கையை விதைத்துள்ளது.

Story first published: Monday, May 4, 2026, 21:20 [IST]
Other articles published on May 4, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+