Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: மெகா ட்விஸ்ட்.. ஹர்திக் பாண்டியா நீக்கம்.. மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக சூர்யகுமார் யாதவ்!

மும்பை: 2026 ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 47-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் போடும் இடத்திற்கு மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் வந்ததைக் கண்டு ஒட்டுமொத்த ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர். பிளே ஆஃப் வாய்ப்பு நூலிழையில் இருக்கும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி பல அதிரடி மாற்றங்கள் செய்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் தற்காலிக கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஹர்திக் பாண்டியா இன்று உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விளையாடவில்லை என்றும், அவருக்குப் பதிலாகத் தான் கேப்டன் பொறுப்பை ஏற்பதாகவும் சூர்யா தெரிவித்தார். மும்பை ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக, நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா மீண்டும் ஆடும் லெவனில் இணைந்துள்ளார். மேலும், டிரெண்ட் போல்ட்டுக்கு பதிலாக கார்பின் போஷ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 7 தோல்விகளைச் சந்தித்துள்ள மும்பை அணிக்கு, மீதமுள்ள 5 போட்டிகளும் பிளே ஆப் வாய்ப்பிற்கு மிகவும் முக்கியமானது.

IPL 2026 MI vs LSG Hardik Pandya Out Suryakumar Yadav Leads MI Mumbai Indians Win Toss Against LSG in IPL 2026

மறுபுறம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேசுகையில், தானும் முதலில் பந்துவீசவே நினைத்ததாகத் தெரிவித்தார். லக்னோ அணியைப் பொறுத்தவரை இங்கிலிஸ் மற்றும் ரகுவன்ஷி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சீசன் லக்னோ அணிக்கும் சவாலாகவே இருந்து வருகிறது. அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பதால், அவருக்காகவும் ரசிகர்களுக்காகவும் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெறப் போவதாக பண்ட் உறுதி அளித்தார்.

வான்கடே மைதானத்தின் ஆடுகளம் சிவப்பு மண் மற்றும் புற்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆரம்பத்தில் கூடுதல் வேகம் மற்றும் பவுன்ஸ் கிடைக்கும். அதேசமயம் ஆடுகளத்தின் மேல் பகுதியில் லேசான ஈரப்பதம் இருப்பதால் சுழற்பந்து வீச்சாளர்களும் பவர் பிளே ஓவர்களில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மைதானத்தின் எல்லைகள் ஒருபுறம் 61 மீட்டராகவும், மறுபுறம் 67 மீட்டராகவும், நேராக 75 மீட்டராகவும் உள்ளன. இது ஒரு அதிரடி ஆட்டமாக இருக்கும் என்பதால் பேட்ஸ்மேன்கள் ரன் மழை பொழிவது உறுதி.

புள்ளிப்பட்டியலில் மிகவும் பின்தங்கியுள்ள மும்பை அணிக்கு இந்த வெற்றி மிகவும் அவசியம். ஹர்திக் பாண்டியா இல்லாத நிலையில், சூர்யகுமார் யாதவ் அணியை எப்படி வழிநடத்தப் போகிறார் மற்றும் ரோஹித் சர்மாவின் வருகை எந்த மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பிளேயிங் 11: மிட்செல் மார்ஷ், எய்டன் மார்க்ரம், ரிஷப் பந்த் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஜோஷ் இங்கிலிஸ், நிக்கோலஸ் பூரன், அக்சத் ரகுவன்ஷி, ஹிம்மத் சிங், முகமது ஷமி, மோசின் கான், ஆவேஷ் கான், பிரின்ஸ் யாதவ்.

இம்பாக்ட் சப்ஸ்டிடியூட்: மணிமாறன் சித்தார்த், திக்வேஷ் சிங் ரதி, மயங்க் யாதவ், ஷாபாஸ் அகமது, அப்துல் சமத்.

மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் 11: ரயான் ரிக்கெல்டன் (விக்கெட் கீப்பர்), நமன் தீர், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, வில் ஜாக்ஸ், ராஜ் பாவா, கார்பின் போஷ், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, ஏ.எம். கசன்ஃபர், ரகு சர்மா.

இம்பாக்ட் சப்ஸ்டிடியூட் : ரோஹித் சர்மா, மயங்க் ராவத், ராபின் மின்ஸ், ஷர்துல் தாக்கூர், டிரெண்ட் போல்ட்.

Story first published: Monday, May 4, 2026, 19:25 [IST]
Other articles published on May 4, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+