Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: சன்ரைசர்ஸ் செய்த செயல்.. உறைந்து போன மும்பை இந்தியன்ஸ்.. இவ்ளோ ரன் அடித்தும் தோல்வியா?

மும்பை: வான்கடே மைதானத்தில் 243 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்த பிறகும், மும்பை இந்தியன்ஸ் அணி படுதோல்வியைத் தழுவியது. டி20 கிரிக்கெட்டில் 240 ரன்களுக்கு மேல் எடுத்தால் வெற்றி நிச்சயம் என்ற பிம்பத்தை, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பேட்டர்கள் சுக்குநூறாக உடைத்தெறிந்தனர். இந்த தோல்வியால் மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பு சிக்கலாக மாறி உள்ளது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, ரையான் ரிக்கல்டன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இன்னிங்ஸை வழங்கினார். வெறும் 55 பந்துகளில் 123 ரன்கள் குவித்த அவர், 2008-ம் ஆண்டு இதே மைதானத்தில் சனத் ஜெயசூர்யா படைத்த 114 ரன்கள் என்ற 18 ஆண்டுகால சாதனையை முறியடித்தார். வில் ஜாக்ஸ் 46 ரன்களும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 31 ரன்களும் எடுக்க, மும்பை அணி 20 ஓவர்களில் 243 ரன்கள் என்ற பெரும் ஸ்கோரை எட்டியது.

IPL 2026 MI vs SRH Mumbai Indians Lose Despite Scoring 243 SRH Pull Off Record Run Chase at Wankhede

ஆனால், இந்த இலக்கு ஹைதராபாத் அணியின் அதிரடி வீரர்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஜோடி, மும்பை பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. பவர்பிளே ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் குவித்து ஹைதராபாத் மிரட்டியது. டிராவிஸ் ஹெட் 30 பந்துகளில் 8 சிக்ஸர்களுடன் 76 ரன்கள் விளாசினார். அபிஷேக் சர்மா 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் வந்த ஹென்ரிச் கிளாசன், மும்பை ரசிகர்களின் நம்பிக்கையை மொத்தமாகச் சிதைத்தார். 30 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர், சலில் அரோராவுடன் இணைந்து ஹைதராபாத் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். சலில் அரோரா வெறும் 10 பந்துகளில் 30 ரன்கள் குவித்து ஆச்சரியப்படுத்தினார். ஹைதராபாத் அணி 18.4 ஓவர்களிலேயே 249 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

IPL 2026: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறுகிறாரா வைபவ் சூர்யவன்ஷி? ராஜஸ்தான் அணியை எச்சரித்த பிராட்

IPL 2026: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறுகிறாரா வைபவ் சூர்யவன்ஷி? ராஜஸ்தான் அணியை எச்சரித்த பிராட்

மும்பை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்களில் விக்கெட் ஏதுமின்றி 54 ரன்களை வாரி வழங்கியது அந்த அணியின் பலவீனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது. ஏ.எம். கசன்ஃபர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் ஹைதராபாத்தின் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தத் தோல்வியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்திலேயே நீடிக்கிறது. அதேசமயம், ஹைதராபாத் அணி 12 புள்ளிகளுடன் பிளே-ஆப் வாய்ப்பை நோக்கி வேகமாக முன்னேறி உள்ளது. சொந்த மண்ணில் இத்தனை ரன்கள் குவித்தும் மும்பை தோற்றது, அந்த அணி ரசிகர்களுக்கு ஆறாத வடுவாக மாறியுள்ளது.

Story first published: Wednesday, April 29, 2026, 23:46 [IST]
Other articles published on Apr 29, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+