IPL 2026: மும்பை இந்தியன்ஸ் அணி டிரஸிங் ரூம்மில் நடப்பதை வெளியே சொல்வது யார்? கடுப்பான அம்பானி
ஐபிஎல் 2026 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் டிரஸிங் ரூம் விசியங்கள் தொடர்ச்சியாக கசிவது அணி நிர்வாகத்திற்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை, ஹர்திக் பாண்டியா தலைமையின் கீழ் கடந்த மூன்று சீசன்களில் இரண்டாவது முறையாக பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல், இந்த சீசனில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்து ஏமாற்றம் அளித்தது.
அணியின் முக்கிய ரகசிய தகவல்கள் பலமுறை பகிரங்கமாக வெளிவந்தும், நிர்வாகம் அவற்றைக் கட்டுப்படுத்தவில்லை. சமீபத்தில், கேப்டன் ஹர்திக் பாண்டியாவை நீக்க அணி நிர்வாகம் பரிசீலிப்பதாக வெளியான தகவல், வெளியாகி இருப்பது அணி நிர்வாகத்திற்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிட்டத்தட்ட எல்லா ஆடைமாற்றும் அறைகளிலும் கருத்து வேறுபாடுகள் இருக்கும். ஆனால், ஹர்திக் திரும்பியதிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் பிளவும், கசப்புணர்வும் வழக்கத்திற்கு மாறாக மிக அதிகமாக உள்ளது" என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது.
"என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க ஒரு நிபுணர் தேவையில்லை. மும்பை போன்ற, அதன் முக்கிய வீரர்களை எப்போதும் மதிக்கும் ஒரு அணிக்கு, இந்தத் தொடர்ச்சியான கசிவுகள் ஒரு பெரிய கவலையாக மாறிவிட்டதாக விமர்சகர்களும் கூறியுள்ளனர்.
"அந்த டிரஸிங் ரூமில் பல ஜாம்பவான்களையும், கேப்டன்சி மாற்றங்களையும் கண்டது, ஆனால் இப்படி ஒரு நிலைமையை அது இதற்குமுன் ஒருபோதும் கண்டதில்லை. ஆடைமாற்றும் அறையில் வெளிப்படையாகத் தெரியும் பிளவு, களத்தில் அவர்களின் சைகை மொழி, அல்லது அவர்களது ஆடும் விதம் என அனைத்திலும் பிரச்சனைகள் தெளிவாகத் தெரிகின்றன.
"அணியின் முன்னுரிமைகள் சரியாக இல்லை. வீரர்கள் காயத்திலிருந்து களத்திற்குத் திரும்ப நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறார்கள், மேலும் அனைவரும் போட்டிகளில் வெறுமனே வருகையைப் பதிவுசெய்வது போலத் தெரிகிறது" என்றும் ரசிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த படுமோசமான செயல்பாடுகளுக்குப் பிறகு இயல்பு நிலையை மீட்டெடுக்க, அணி நிர்வாகம் பிரச்சனையை அடையாளம் கண்டுள்ளதாகவும், உறுதியான நடவடிக்கை எடுக்க முயற்சித்து வருகிறது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, லீக் சுற்றின் கடைசி நாளில் வான்கடே மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிக்கு எதிராக 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, தங்களது மறக்க விரும்பும் சீசனை முடித்தது. 206 ரன்கள் இலக்கை துரத்திய மும்பை அணி, 175/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் 42 பந்துகளில் 60 ரன்கள் அடித்தார்.


Click it and Unblock the Notifications

