Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: மும்பை இந்தியன்ஸ் அணி எந்த வீரரை மாற்ற வேண்டும்.. முன்னாள் சிஎஸ்கே வீரர் கருத்து

மும்பை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசன் முன்னிட்டு மும்பை இந்தியன்ஸ் அணி எந்த வீரர்களை தக்க வைக்க வேண்டும். எந்த வீரர்களை விடுவிக்க வேண்டும் என்பது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

ஐந்து முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி கடைசியாக 2020 ஆம் ஆண்டு தான் சாம்பியன் பட்டத்தை வென்றது. தற்போது ஐந்து ஆண்டுகளாக அந்த அணி கோப்பையை கைப்பற்ற வில்லை. எனினும் 2025 ஆம் ஆண்டு சீசன் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

Mumbai Indians

இந்த நிலையில் மும்பை அணி மீண்டும் கோப்பையை வெல்ல தீவிர முயற்சிகளை செய்து வருகிறது. அந்த வகையில் மும்பை வரும் மினி ஏலத்திற்கு முன்பு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பத்ரிநாத் அளித்த கருத்தை தற்போது பார்க்கலாம். அதில், மும்பை அணி தற்போது மிகச்சிறந்த அணியாக விளங்குகிறது.

அவர்களைப் பற்றி சொல்ல ஒன்றுமே இல்லை. வேண்டுமானால் அந்த அணியில் தீபக் சாகரை நீக்கிவிட்டு வேறு ஒரு நல்ல வேகப்பந்துவீச்சாளரை சேர்க்க அவர்கள் முயற்சிக்கலாம். அதை தவிர வேறு எந்த ஒரு மாற்றமும் செய்ய வேண்டிய சூழலில் மும்பை அணி இல்லை. ரோகித் சர்மா, பும்ரா, சூரியகுமார், திலக் வர்மா,ஹர்திக் பாண்டியா போன்ற திறமை வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள்.

இதை தவிர ஒரு அணிக்கு வேறு என்ன வேண்டும். அதேபோன்று மிட்செல் சாண்ட்னர், ரியாண் ரிகுல்டன் போன்ற வீரர்களும் இருக்கிறார்கள். எனவே மும்பை அணிக்கு ஒன்று அல்லது இரண்டு வீரர்கள் மட்டும்தான் தேவைப்படும் என நினைக்கின்றேன்.

மும்பை அணி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விளையாடினால் எந்த ஒரு சர்வதேச அணியையும் அவர்களால் வீழ்த்த முடியும். மும்பை அணியில் மாற்ற எதுவும் தேவையில்லை. சில பகுதிகளை அவர்கள் மாற்ற நினைக்கலாம். இதற்காக வேண்டுமானால் அவர்கள் ஏலத்தில் பங்கேற்கலாம். மற்றபடி மும்பை அணியில் அனைத்துமே நன்றாக இருக்கின்றது என பத்ரிநாத் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, November 11, 2025, 23:34 [IST]
Other articles published on Nov 11, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+