Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: ஆரஞ்சு தொப்பி பட்டியலில் கோலி, அபிஷேக்குக்கு முன் 400 ரன்களை தொட்ட வைபவ் சூர்யவன்ஷி

ஜெய்ப்பூர்: 2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிக ரன் குவித்த வீரர்களுக்கான ஆரஞ்சு தொப்பி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடி ஆட்டம் ஆடிய அவர் 16 பந்துகளில் 43 ரன்கள் குவித்து இருந்தார்.

அதன் மூலம் இந்த ஆண்டு 400 ரன்களைக் கடந்த முதல் வீரராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வைபவ் சூர்யவன்ஷி ஆரஞ்சு தொப்பி பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவருக்கு மிகப்பெரிய சவாலாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அபிஷேக் சர்மா 380 ரன்களுடன் மிரட்டி வருகிறார். குறிப்பாக அபிஷேக் சர்மாவின் ஸ்டிரைக் ரேட் 212.29 ஆக இருப்பது வைபவ் சூர்யவன்ஷிக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.

IPL 2026 Orange Cap Purple Cap Vaibhav Suryavanshi Leads Orange Cap Race Bhuvneshwar in Purple cap

டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனது கடைசி போட்டியில் 72 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி இருந்தாலும், அந்த அணியின் முன்னணி வீரர் கே.எல்.ராகுல் 358 ரன்களுடன் 3-வது இடத்தில் நீடிக்கிறார். பிரப்சிம்ரன் சிங் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் அதிரடி ஃபார்ம் வரும் போட்டிகளில் வைபவ் சூர்யவன்ஷியின் முதலிடத்திற்கு ஆபத்தாக அமையலாம். விராட் கோலி 351 ரன்களுடன் நான்காவது இடத்தில் இருக்கிறார்.

அதிக விக்கெட் வீழ்த்தியவர்களுக்கான ஊதா தொப்பி பட்டியலில் புவனேஷ்வர் குமார், ஜோப்ரா ஆர்ச்சர், அன்ஷுல் கம்போஜ், ஈஷன் மலிங்கா ஆகியோர் தலா 14 விக்கெட்கள் வீழ்த்தி முதல் நான்கு இடங்களில் உள்ளனர். எனவே, இந்தப் பட்டியலில் தினமும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.

ஆரஞ்சு தொப்பி பட்டியல் (டாப் 10):

வைபவ் சூர்யவன்ஷி (ராஜஸ்தான்) - 9 போட்டி - 400 ரன் - 238.09 ஸ்டிரைக் ரேட்
அபிஷேக் சர்மா (ஹைதராபாத்) - 8 போட்டி - 380 ரன் - 212.29 ஸ்டிரைக் ரேட்
கே.எல்.ராகுல் (டெல்லி) - 8 போட்டி - 358 ரன் - 185.49 ஸ்டிரைக் ரேட்
விராட் கோலி (பெங்களூரு) - 8 போட்டி - 351 ரன் - 162.50 ஸ்டிரைக் ரேட்
ஹென்ரிச் கிளாசன் (ஹைதராபாத்) - 8 போட்டி - 349 ரன் - 149.78 ஸ்டிரைக் ரேட்
பிரப்சிம்ரன் சிங் (பஞ்சாப்) - 8 போட்டி - 346 ரன் - 179.27 ஸ்டிரைக் ரேட்
ஷுப்மன் கில் (குஜராத்) - 7 போட்டி - 330 ரன் - 148.64 ஸ்டிரைக் ரேட்
சாய் சுதர்சன் (குஜராத்) - 8 போட்டி - 322 ரன் - 163.45 ஸ்டிரைக் ரேட்
இஷான் கிஷன் (ஹைதராபாத்) - 8 போட்டி - 312 ரன் - 198.72 ஸ்டிரைக் ரேட்
ஸ்ரேயாஸ் ஐயர் (பஞ்சாப்) - 8 போட்டி - 309 ரன் - 174.57 ஸ்டிரைக் ரேட்

ஊதா நிறத் தொப்பி பட்டியல் (டாப் 10):

புவனேஷ்வர் குமார் (பெங்களூரு) - 8 போட்டி - 14 விக்கெட் - 7.61 எகானமி
ஜோப்ரா ஆர்ச்சர் (ராஜஸ்தான்) - 9 போட்டி - 14 விக்கெட் - 8.27 எகானமி
அன்ஷுல் கம்போஜ் (சென்னை) - 8 போட்டி - 14 விக்கெட் - 8.56 எகானமி
ஈஷன் மலிங்கா (ஹைதராபாத்) - 8 போட்டி - 14 விக்கெட் - 9.44 எகானமி
பிரின்ஸ் யாதவ் (லக்னோ) - 8 போட்டி - 13 விக்கெட் - 8.06 எகானமி
ககிசோ ரபாடா (குஜராத்) - 8 போட்டி - 13 விக்கெட் - 9.48 எகானமி
பிரசித் கிருஷ்ணா (குஜராத்) - 7 போட்டி - 12 விக்கெட் - 10.34 எகானமி
ரவி பிஷ்னோய் (ராஜஸ்தான்) - 8 போட்டி - 11 விக்கெட் - 9.54 எகானமி
மொசின் கான் (லக்னோ) - 4 போட்டி - 9 விக்கெட் - 6.37 எகானமி
குருணால் பாண்டியா (பெங்களூரு) - 8 போட்டி - 9 விக்கெட் - 8.85 எகானமி

Story first published: Wednesday, April 29, 2026, 7:26 [IST]
Other articles published on Apr 29, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+