IPL 2026: ஆரஞ்சு, ஊதா தொப்பிகள் ஒரே அணிக்கு.. தட்டித் தூக்கிய சன்ரைசர்ஸ் வீரர்கள் ஈஷன், அபிஷேக்
மும்பை: 2026 ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டியின் முடிவில் ஆரஞ்சு தொப்பி மற்றும் ஊதா தொப்பிகள் யார் வசம் உள்ளன என்று பார்க்கலாம். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வீரர்கள் ஆரஞ்சு மற்றும் ஊதா நிறத் தொப்பிகளைத் தட்டிப்பறித்து தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயித்த 244 ரன்கள் என்ற இமாலய இலக்கை, ஹைதராபாத் அணி 18.4 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றது. ரையான் ரிக்கல்டனின் 123 ரன்கள் வீணான நிலையில், ஹைதராபாத்தின் டிராவிஸ் ஹெட் 76 ரன்களும், ஹென்ரிச் கிளாசன் 65 ரன்களும் எடுத்து மிரட்டினர். இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மும்பை அணி விளையாடிய 8 போட்டிகளில் 6-ல் தோற்று 9-வது இடத்தில் பரிதாபமாக நீடிக்கிறது.

ஆரஞ்சு தொப்பி: முதலிடத்தில் அபிஷேக் சர்மா
நேற்றைய போட்டியில் 24 பந்துகளில் 45 ரன்கள் எடுத்ததன் மூலம், ஹைதராபாத் அணியின் அபிஷேக் சர்மா 425 ரன்களுடன் ஆரஞ்சு தொப்பியைத் தன்வசமாக்கியுள்ளார். அவர் வைபவ் சூரியவன்ஷியை பின்னுக்குத் தள்ளியுள்ளார். அதேபோல், கிளாசன் 414 ரன்களுடன் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஆரஞ்சு தொப்பி பட்டியல் (டாப் 10):
- அபிஷேக் சர்மா (ஹைதராபாத்) - 9 போட்டி - 425 ரன்
- ஹென்ரிச் கிளாசன் (ஹைதராபாத்) - 9 போட்டி - 414 ரன்
- வைபவ் சூரியவன்ஷி (ராஜஸ்தான்) - 9 போட்டி - 400 ரன்
- கே.எல்.ராகுல் (டெல்லி) - 8 போட்டி - 358 ரன்
- விராட் கோலி (பெங்களூரு) - 8 போட்டி - 351 ரன்
- பிரப்சிம்ரன் சிங் (பஞ்சாப்) - 8 போட்டி - 346 ரன்
- சுப்மன் கில் (குஜராத்) - 7 போட்டி - 330 ரன்
- சாய் சுதர்சன் (குஜராத்) - 8 போட்டி - 322 ரன்
- இஷான் கிஷன் (ஹைதராபாத்) - 9 போட்டி - 312 ரன்
- ஸ்ரேயாஸ் ஐயர் (பஞ்சாப்) - 8 போட்டி - 309 ரன்
ஊதா தொப்பி: ஈஷன் மலிங்கா மகுடம்
பந்துவீச்சிலும் ஹைதராபாத் அணி ஆதிக்கம் செலுத்துகிறது. நேற்றைய போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்தியதன் மூலம் ஈஷன் மலிங்கா மொத்தம் 15 விக்கெட்டுகளுடன் முதலிடத்திற்கு முன்னேறி ஊதா நிறத் தொப்பியைப் பெற்றுள்ளார்.
ஊதா தொப்பி பட்டியல் (டாப் 10):
- ஈஷன் மலிங்கா (ஹைதராபாத்) - 9 போட்டி - 15 விக்கெட்
- புவனேஷ்வர் குமார் (பெங்களூரு) - 8 போட்டி - 14 விக்கெட்
- ஜோப்ரா ஆர்ச்சர் (ராஜஸ்தான்) - 9 போட்டி - 14 விக்கெட்
- அன்ஷுல் கம்போஜ் (சென்னை) - 8 போட்டி - 14 விக்கெட்
- பிரின்ஸ் யாதவ் (லக்னோ) - 8 போட்டி - 13 விக்கெட்
- ககிசோ ரபாடா (குஜராத்) - 8 போட்டி - 13 விக்கெட்
- பிரசித் கிருஷ்ணா (குஜராத்) - 7 போட்டி - 12 விக்கெட்
- ரவி பிஷ்னோய் (ராஜஸ்தான்) - 8 போட்டி - 11 விக்கெட்
- அல்லா கசன்ஃபர் (மும்பை) - 6 போட்டி - 10 விக்கெட்
- மொசின் கான் (லக்னோ) - 4 போட்டி - 9 விக்கெட்


Click it and Unblock the Notifications