மும்பை: ஐபிஎல் தொடரின் 19வது சீசன் இன்று முதல் கோலாகலமாகத் தொடங்குகிறது. ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளும், நடப்பு சாம்பியன் ஆர்சிபியும் மீண்டும் கோப்பை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு இருக்க, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனுக்கான பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறக்கூடிய நான்கு அணிகள் எவை என்பதை கணித்திருக்கிறார்கள்.
தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் தனது கணிப்பில், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி), பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அல்லது டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் பிளேஆஃப்க்கு தகுதி பெறும் எனக் கூறியுள்ளார்.

முன்னாள் ஆல்ரவுண்டர் இர்ஃபான் பதான், மும்பை, டெல்லி, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் எனத் தெரிவித்துள்ளார். ஹர்பஜன் சிங், மும்பை, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் பிளேஆஃப்க்கு தகுதி பெரும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

கிரிக்கெட் விமர்சகர் ஆகாஷ் சோப்ரா, பிளேஆஃப் சுற்றுக்கு மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் தகுதிபெறும் என கணித்துள்ளார். இதேபோல, இந்திய டெஸ்ட் பேட்ஸ்மேன் சேட்டேஷ்வர் புஜாரா, மும்பை, குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கு வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் வீரர் முகமது கைஃப், மும்பை, ஆர்சிபி, பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் பிளேஆஃபிற்குள் நுழையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஹனுமா விஹாரி, மும்பை, சன்ரைசர்ஸ், டெல்லி, பஞ்சாப் ஆகிய அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என குறிப்பிட்டுள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் பியூஸ் சாவ்லா, மும்பை, ஆர்சிபி, கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் தகுதி பெறுமென சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் விக்கெட் கீப்பர் சபா கரீம், மும்பை, ஆர்சிபி, டெல்லி மற்றும் சென்னை அணிகள் பிளேஆஃபிற்குள் நுழையும் என தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஆல்ரவுண்டர் சஞ்சய் பாங்கர், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகளைத் தேர்வு செய்துள்ளார். லட்சுமிபதி பாலாஜி, மும்பை, ஆர்சிபி, சிஎஸ்கே மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் தகுதி பெற வாய்ப்புள்ளதாக கணித்துள்ளார்.

வருண் ஆரோன், மும்பை, ஆர்சிபி, சன்ரைசர்ஸ் மற்றும் சென்னை அணிகள் பிளேஆஃப்க்கு தகுதி பெறுமென கூறியுள்ளார்.இந்த அனைத்து முன்னாள் வீரர்களுமே ஒருமித்த குரலில் மும்பை இந்தியன்ஸ் அணியைத் தேர்வு செய்துள்ளனர். எனவே, இம்முறை மும்பை அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் வலுத்து வருகிறது.