Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: ஆரஞ்சு, ஊதா தொப்பி பட்டியலில் முதலிடம் பிடித்தது யார்? கொல்கத்தா பெரும் சரிவு

கொல்கத்தா: 2026 ஐபிஎல் தொடரின் 6வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. இந்தப் போட்டியின் முடிவில் புள்ளிப்பட்டியல், அதிக ரன் குவித்ததற்கான ஆரஞ்சு தொப்பி, அதிக விக்கெட் வீழ்த்தியதற்கான ஊதா தொப்பி ஆகிய பட்டியல்கள் மாறி உள்ளன.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 226 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 16 ஓவர்களில் 161 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஹைதராபாத் அணியின் ஜெய்தேவ் உனத்கட் 21 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் 9வது இடத்திலிருந்து 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தொடர்ந்து 2 போட்டிகளில் தோல்வியடைந்த கொல்கத்தா 9வது இடத்திற்கு சரிந்தது.

IPL 2026 Points table Jaydev Unadkat Claims Purple Cap Raghuvanshi get Orange cap

ஐபிஎல் 2026 புள்ளிப்பட்டியல் (டாப் 10):

ராஜஸ்தான் ராயல்ஸ் - 2 புள்ளிகள்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 2 புள்ளிகள்
டெல்லி கேப்பிடல்ஸ் - 2 புள்ளிகள்
மும்பை இந்தியன்ஸ் - 2 புள்ளிகள்
பஞ்சாப் கிங்ஸ் - 2 புள்ளிகள்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 2 புள்ளிகள்
குஜராத் டைட்டன்ஸ் - 0 புள்ளிகள்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 0 புள்ளிகள்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 0 புள்ளிகள்
சென்னை சூப்பர் கிங்ஸ் - 0 புள்ளிகள்

கொல்கத்தா அணியின் 21 வயது இளம் வீரர் அங்குரிஷ் ரகுவன்ஷி தற்போது ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியுள்ளார். முதல் போட்டியில் 51 ரன்கள் எடுத்த அவர், ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 29 பந்துகளில் 52 ரன்கள் விளாசினார். இதன் மூலம் 2 போட்டிகளில் மொத்தம் 103 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார்.

ஆரஞ்சு தொப்பி பட்டியல் (அதிக ரன்கள்):

அங்குரிஷ் ரகுவன்ஷி (கொல்கத்தா) - 103 ரன்கள்
இஷான் கிஷன் (ஹைதராபாத்) - 94 ரன்கள்
ஹென்ரிச் கிளாசென் (ஹைதராபாத்) - 83 ரன்கள்
ரையன் ரிக்கெல்டன் (மும்பை) - 81 ரன்கள்
ரோஹித் சர்மா (மும்பை) - 78 ரன்கள்

பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை, ஹைதராபாத் அணியின் ஜெய்தேவ் உனத்கட் 2 போட்டிகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஊதா தொப்பியை தனதாக்கியுள்ளார். கொல்கத்தா அணியின் பிளெஸ்ஸிங் முசரபானியும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தாலும், எகானமி அடிப்படையில் உனத்கட் முதலிடம் பிடித்துள்ளார்.

ஊதா தொப்பி பட்டியல் (அதிக விக்கெட்டுகள்):

ஜெய்தேவ் உனத்கட் (ஹைதராபாத்) - 4 விக்கெட்டுகள்
பிளெஸ்ஸிங் முசரபானி (கொல்கத்தா) - 4 விக்கெட்டுகள்
ஜேக்கப் டஃபி (பெங்களூரு) - 3 விக்கெட்டுகள்
டி நடராஜன் (டெல்லி) - 3 விக்கெட்டுகள்
பிரசித் கிருஷ்ணா (குஜராத்) - 3 விக்கெட்டுகள்

Story first published: Friday, April 3, 2026, 6:57 [IST]
Other articles published on Apr 3, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+