Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026 புள்ளிப்பட்டியல்.. குஜராத்திடம் தோல்வி அடைந்தாலும் சரியாத ஆர்சிபி அணி.. எந்த இடம்?

அகமதாபாத்: 2026 ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்த போட்டிகள் பல எதிர்பாராத திருப்புமுனைகளை ஏற்படுத்தி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றன. நேற்றைய போட்டியில் படுதோல்வியை சந்தித்த போதிலும், புள்ளிப்பட்டியலில் கெத்தாக தனது இடத்தை தக்கவைத்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று ஏப்ரல் 30 நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் ஆர்சிபி அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி குஜராத்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.3 ஓவர்களில் 155 ரன்களுக்கு சுருண்டது. அதன் பின் 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. எனினும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 15.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

IPL 2026 Points Table RCB Retains Second Spot Despite Huge Loss Against Gujarat Titans in Ahmedabad

ஆர்சிபி அணி தோல்வியை தழுவிய போதிலும், அந்த அணியின் பந்துவீச்சாளர் புவனேஸ்வர் அபாரமாக செயல்பட்டார். அவர் வீசிய 4 ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் இந்த தொடரில் இதுவரை மொத்தம் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்களுக்கான ஊதா நிற தொப்பியை அவர் தன்வசப்படுத்தியுள்ளார். அவர் இஷான் மலிங்காவை விட 2 விக்கெட்டுகள் கூடுதலாக வீழ்த்தி முதலிடத்தில் கம்பீரமாக உள்ளார்.

உள்ளூர் ரசிகர்கள் முன் பெற்ற இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி மொத்தம் 10 புள்ளிகளை பெற்றுள்ளது. எனினும் அந்த அணி புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து 5வது இடத்தில் நீடிக்கிறது. அதே சமயம், ஆர்சிபி அணி இந்த போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்த போதிலும், சிறப்பான ரன் ரேட் காரணமாக புள்ளிப்பட்டியலில் எந்த சறுக்கலும் இல்லாமல் தொடர்ந்து 2வது இடத்தை தக்கவைத்துள்ளது. பஞ்சாப் அணி 13 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.

IPL 2026: ஒரே ஓவரில்.. மிரள வைத்த கோலி.. ரபாடாவை துவம்சம் செய்து கிறிஸ் கெய்ல் சாதனையை சமன் செய்தார்

IPL 2026: ஒரே ஓவரில்.. மிரள வைத்த கோலி.. ரபாடாவை துவம்சம் செய்து கிறிஸ் கெய்ல் சாதனையை சமன் செய்தார்

ஏப்ரல் 30 குஜராத் மற்றும் ஆர்சிபி போட்டிக்கு பிறகான புள்ளிப்பட்டியல் விபரம்:

  1. பஞ்சாப் கிங்ஸ்: போட்டிகள் 8, வெற்றி 6, தோல்வி 1, புள்ளிகள் 13, நெட் ரன் ரேட் 1.043
  2. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: போட்டிகள் 9, வெற்றி 6, தோல்வி 3, புள்ளிகள் 12, நெட் ரன் ரேட் 1.420
  3. சன்ரைசர்ஸ் ஐதராபாத்: போட்டிகள் 9, வெற்றி 6, தோல்வி 3, புள்ளிகள் 12, நெட் ரன் ரேட் 0.832
  4. ராஜஸ்தான் ராயல்ஸ்: போட்டிகள் 9, வெற்றி 6, தோல்வி 3, புள்ளிகள் 12, நெட் ரன் ரேட் 0.617
  5. குஜராத் டைட்டன்ஸ்: போட்டிகள் 9, வெற்றி 5, தோல்வி 4, புள்ளிகள் 10, நெட் ரன் ரேட் -0.192
  6. சென்னை சூப்பர் கிங்ஸ்: போட்டிகள் 8, வெற்றி 3, தோல்வி 5, புள்ளிகள் 6, நெட் ரன் ரேட் -0.121
  7. டெல்லி கேப்பிடல்ஸ்: போட்டிகள் 7, வெற்றி 3, தோல்வி 5, புள்ளிகள் 6, நெட் ரன் ரேட் -1.060
  8. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: போட்டிகள் 8, வெற்றி 2, தோல்வி 5, புள்ளிகள் 5, நெட் ரன் ரேட் -0.751
  9. மும்பை இந்தியன்ஸ்: போட்டிகள் 8, வெற்றி 2, தோல்வி 6, புள்ளிகள் 4, நெட் ரன் ரேட் -0.784
  10. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்: போட்டிகள் 8, வெற்றி 2, தோல்வி 6, புள்ளிகள் 4, நெட் ரன் ரேட் -1.106
Story first published: Friday, May 1, 2026, 7:49 [IST]
Other articles published on May 1, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+