RCB vs KKR: மழையால் தாமதமான டாஸ்.. ஆர்சிபி அணி பந்துவீச்சு.. கொல்கத்தா அணியில் இளம் வீரர் அறிமுகம்
ராய்ப்பூர்: ஐபிஎல் தொடரின் 57வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மழையால் நீண்ட காத்திருப்புக்கு பின் டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இரு அணிகளிலும் செய்யப்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள் என்ன என்பதை விரிவாக பார்ப்போம்.
ஷாஹித் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் இரவு 7 மணிக்கு டாஸ் நிகழ்வு நடைபெற இருந்த நிலையில், திடீரென மழை பெய்ததால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மைதானம் முழுவதும் தார்பாய்களால் மூடப்பட்டது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் மழை நின்ற பிறகு, கள நடுவர்களான நிதின் மேனன் மற்றும் ரோகன் பண்டிட் ஆகியோர் இரவு 8:15 மணிக்கு ஆடுகளத்தை ஆய்வு செய்தனர்.

மைதானம் விளையாட பாதுகாப்பாக இருந்ததால், இரவு 8:30 மணிக்கு டாஸ் போடப்பட்டது. ஓவர்கள் எதுவும் குறைக்கப்படாமல் இரவு 8:45 மணிக்கு போட்டி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார் கூறுகையில், ஆடுகளம் கடந்த போட்டியை போலவே உள்ளது. பந்து ஆடுகளத்தில் குத்தி எகிறும் என்பதால் முதலில் பந்துவீசுவது சிறப்பாக இருக்கும் என கணித்துள்ளோம் என்றார்.
கடந்த போட்டியில் கிடைத்த கடைசி நேர வெற்றி தங்களுக்கு மாபெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது என அவர் தெரிவித்தார். இந்தப் போட்டியில் பெங்களூரு அணியில் ரொமாரியோ ஷெப்பர்டுக்கு பதிலாக வெங்கடேஷ் ஐயர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மறுபுறம் கொல்கத்தா கேப்டன் அஜிங்க்யா ரஹானே கூறுகையில், நாங்களும் டாஸ் வென்றிருந்தால் முதலில் பந்துவீசவே திட்டமிட்டிருந்தோம். அடுத்தடுத்த போட்டிகளை பற்றி சிந்திக்காமல் ஒவ்வொரு போட்டியாக கவனம் செலுத்தி வருகிறோம் என்றார். மேலும், சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்திக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதால், அவருக்கு பதிலாக விதர்பாவை சேர்ந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர் சவுரப் துபே ஐபிஎல் அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Playing XI): அஜின்கியா ரஹானே (கேப்டன்), ஃபின் ஆலன், கேமரூன் கிரீன், அங்கிரிஷ் ரகுவன்ஷி (விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், மனிஷ் பாண்டே, ரிங்கு சிங், சுனில் நரைன், அனுகுல் ராய், வைபவ் அரோரா, கார்த்திக் தியாகி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இம்பாக்ட் வீரர்கள்: சௌரப் துபே, ரமன்தீப் சிங், தேஜஸ்வி தஹியா, நவ்தீப் சைனி, டிம் சீஃபெர்ட்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Playing XI): ஜேக்கப் பெத்தெல், விராட் கோலி, ரஜத் படிதார் (கேப்டன்), ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், வெங்கடேஷ் ஐயர், குருணால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ரசிக் சலாம் தார், ஜேக்கப் டஃபி, ஜோஷ் ஹேசில்வுட்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இம்பாக்ட் வீரர்கள்: தேவ்தத் படிக்கல், ஜோர்டான் காக்ஸ், மங்கேஷ் யாதவ், ரொமாரியோ ஷெப்பர்ட், ஸ்வப்னில் சிங்


Click it and Unblock the Notifications