Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

MI vs RR மழை காரணமாக 11 ஓவர்களாக போட்டி குறைப்பு.. பவர்பிளே, விதிகள் மாற்றம்

கவுஹாத்தி: ஐபிஎல் 2026 தொடரின் 13வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. கவுஹாத்தியில் உள்ள பர்சபரா மைதானத்தில் நடைபெற வேண்டிய இந்தப் போட்டி, மழை காரணமாக ஆட்டம் 11 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது. .

இடைவிடாமல் மழை பெய்ததால், மைதானம் முழுவதும் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக வீரர்கள் அனைவரும் உள்ளேயே முடங்கியுள்ளனர். போட்டி தொடங்குவது குறித்து மிகுந்த நிச்சயமற்ற தன்மை நீடித்து வருகிறது. இது ஆயிரக்கணக்கான உள்ளூர் ரசிகர்களுக்கும், நாடு முழுவதும் காத்திருக்கும் கிரிக்கெட் பிரியர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது,

மழை சற்று ஓய்ந்தவுடன் மைதானத்தைப் போட்டிக்குத் தயார்ப்படுத்த ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். தற்போது ஆடுகளம் தயாரானதால் ஆட்டம் 11 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பவர்பிளே 3.2 ஓவர்களாக இரு அணிக்கும் தரப்பட்டுள்ளது. இந்த நிலையில், டாஸ் வென்ற மும்பை அணி, முதலில் பந்துவீச்சை தேர்வி செய்துள்ளது. ஒரு பவுலர் 3 ஓவர்களும், மற்ற பவுலர்கள் தலா 2 ஓவர்களும் வீசலாம்.

' “மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, மைதானத்திற்கு புறப்படும்போது நிலவிய குளிரான வானிலையைப் பார்த்து ஆச்சரியமடைந்து, "இவ்வளவு சீக்கிரம் எப்படி இவ்வளவு குளிரானது?" என்று ஒரு வீடியோவில் கேட்டுள்ளார்.

கடந்த ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா மீண்டும் அணிக்குத் திரும்புகிறார். , பாண்டியா வலைப் பயிற்சி தொடங்கி இருப்பது அணிக்கு மிகப்பெரிய பலமாகப் பார்க்கப்படுகிறது.

மறுபுறம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த சீசனில் வலுவான தொடக்கத்தைப் பெற்றுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளித்துள்ளனர். தொடக்க வீரர்களின் சிறந்த ஆட்டத்துடன், மிடில் ஆர்டரில் துருவ் ஜூரலின் பங்களிப்பும் ராஜஸ்தானுக்குக் கூடுதல் பலம் சேர்க்கிறது. இந்த சீசனில் ஆதிக்கம் செலுத்தி வரும் ராஜஸ்தான் அணி, புள்ளிகள் பட்டியலில் தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது.

இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இந்த சீசனில் தனது அற்புதமான ஆட்டத்தால் கவனத்தை ஈர்த்துள்ளார். பதினைந்து வயதே ஆன அவர், பொறுப்புடனும், , ஆக்ரோஷமாக பேட்டிங் செய்கிறார். இருப்பினும், அவருக்கு முன்னால் ஒரு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொள்வது, சூர்யவன்ஷியின் பேட்டிங் நுட்பத்தையும் மனநிலையையும் கடுமையாகச் சோதிக்கும்.

சூர்யவன்ஷியின் திறமை குறித்து ஷர்துல் தாக்கூர் கருத்து தெரிவிக்கையில், "வைபவ் சூர்யவன்ஷியைப் பற்றி மிகவும் கவர்ந்த விஷயம் அவரது சிக்ஸ் அடிக்கும் திறன். சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய பேட்ஸ்மேன்களுக்கு இந்த அளவுக்கு சிக்ஸ் அடிக்கும் திறமை இல்லை. இவ்வளவு இளம் வயதில், அவரது சிக்ஸ் அடிக்கும் திறன் விதிவிலக்கானது, அவர் எதிர்காலத்திற்கு ஒரு நம்பிக்கைக்குரிய வீரராகத் தெரிகிறார்" என்று புகழ்ந்துள்ளார்.

Story first published: Tuesday, April 7, 2026, 21:00 [IST]
Other articles published on Apr 7, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+