Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சரித்திரம் படைத்த விராட் கோலி.. எந்த பேட்ஸ்மேனும் செய்யாத ரெக்கார்டு.. MI அணிக்கு எதிராக சாதனை

மும்பை: டி20 கிரிக்கெட் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 1000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற பிரம்மாண்ட சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த 2026 ஐபிஎல் லீக் போட்டியில் அவர் இந்த மைல்கல்லை எட்டினார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 1000 ரன்களை எட்ட கோலிக்கு இந்தப் போட்டியில் 20 ரன்கள் தேவைப்பட்டது. ஆட்டம் தொடங்கிய முதல் 11 பந்துகளிலேயே 20 ரன்களைக் கடந்த அவர், இந்தச் சாதனையை அசாதாரணமாகச் செய்து முடித்தார். ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் டி20 ஆகிய தொடர்களை உள்ளடக்கி இந்த ரன்கள் கணக்கிடப்பட்டுள்ளன.

இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ்-க்கு எதிராக அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் கே.எல்.ராகுல் (977 ரன்கள்) மற்றும் ஷிகர் தவான் (901 ரன்கள்) ஆகியோரை கோலி பின்னுக்குத் தள்ளியுள்ளார். இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் 8 பேர் இந்திய வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி மட்டுமே 2008-ம் ஆண்டு முதல் இன்று வரை ஒரே அணிக்காக (பெங்களூரு) விளையாடி இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

IPL 2026 Virat Kohli Makes History First Player to Score 1000 Runs Against Mumbai Indians in T20s

ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக 1000 ரன்களைக் கடந்த கோலி, தற்போது மும்பை அணிக்கு எதிராகவும் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். உலகின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களைக் கொண்ட மும்பை அணிக்கு எதிராக 1000 ரன்களைக் கடப்பது எளிதான காரியம் அல்ல என ரசிகர்கள் கோலியின் சாதனையை பாராட்டி வருகின்றனர்.

மும்பை இந்தியன்சுக்கு எதிராக அதிக டி20 ரன்கள் குவித்த டாப் 10 வீரர்கள்:

விராட் கோலி - 1001* ரன்கள் (37 போட்டிகள்)
கே.எல்.ராகுல் - 977 ரன்கள் (21 போட்டிகள்)
ஷிகர் தவான் - 901 ரன்கள் (28 போட்டிகள்)
அஜிங்க்யா ரஹானே - 888 ரன்கள் (32 போட்டிகள்)
சுரேஷ் ரெய்னா - 850 ரன்கள் (36 போட்டிகள்)
எம்.எஸ்.தோனி - 829 ரன்கள் (46 போட்டிகள்)
மனிஷ் பாண்டே - 796 ரன்கள் (26 போட்டிகள்)
ஏபி டி வில்லியர்ஸ் - 785 ரன்கள் (25 போட்டிகள்)
டேவிட் வார்னர் - 739 ரன்கள் (23 போட்டிகள்)
சஞ்சு சாம்சன் - 715 ரன்கள் (25 போட்டிகள்)

ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரரான விராட் கோலி, வான்கடே மைதானத்தில் நேற்று ஆடிய அதிரடி ஆட்டம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது. கே.எல்.ராகுல் சராசரி அடிப்படையில் கோலியை விட முன்னிலையில் இருந்தாலும், ஒட்டுமொத்த ரன்கள் எண்ணிக்கையில் கோலி முதலிடத்தைப் பிடித்து சரித்திரம் படைத்துள்ளார். மும்பை அணிக்கு எதிராக சதம் ஏதும் அடிக்காமல் 6 அரைசதங்களுடன் கோலி இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். அவரது இந்தச் சாதனை ஐபிஎல் அரங்கில் நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்க வாய்ப்பு உள்ளது.

Story first published: Sunday, April 12, 2026, 20:39 [IST]
Other articles published on Apr 12, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+