Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யார் இந்த முகுல் சவுத்ரி? கொல்கத்தாவை அலறவிட்ட 21 வயது இளம் புயல்.. லக்னோ அணிக்கு கிடைத்த பினிஷர்

கொல்கத்தா: 2026 ஐபிஎல் தொடரில் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் தோல்வியின் விளிம்பில் தத்தளித்த லக்னோ அணியை, தனது அதிரடி ஆட்டத்தால் தனி ஆளாக மீட்டு 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற வைத்தார் இளம் வீரர் முகுல் சவுத்ரி. வெறும் 27 பந்துகளில் 54 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற அவர், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

யார் இந்த முகுல் சவுத்ரி?

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர் 2004 ஆகஸ்ட் 6 அன்று பிறந்தார். வலது கை பேட்ஸ்மேனான இவர் தற்போது விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில் மிதவேகப் பந்துவீச்சாளராக தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய இவர், பின்னர் விக்கெட் கீப்பிங் மற்றும் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்யத் தொடங்கி அதிரடி காட்டி வருகிறார்.

IPL 2026 Who is Mukul Choudhary The 21-Year-Old LSG Finisher Stunned KKR at Eden Gardens

இந்த 2026 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் இவரது அடிப்படை விலை 30 லட்சம் ரூபாயாக மட்டுமே நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் உள்ளூர் போட்டிகளில் இவரது அதிரடியை கவனித்த பல அணிகள் இவரை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி போட்டன. குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை வாங்க கடுமையாக முயற்சித்தது. முடிவில் 28 முறை ஏலம் கேட்கப்பட்டு, 2.60 கோடி ரூபாய்க்கு லக்னோ அணியால் வளைத்துப் போடப்பட்டார்.

உள்ளூர் போட்டிகளில் அசத்தல்

சையத் முஷ்டாக் அலி தொடரில் 165 என்ற அபாரமான ஸ்ட்ரைக் ரேட்டில் இவர் ரன்களை குவித்தது தான் லக்னோ அணியின் கவனத்தை ஈர்த்தது. கடந்த 2023ல் ரஞ்சி கோப்பையிலும், 2025ல் விஜய் ஹசாரே தொடரிலும் இவர் அறிமுகமானார். இறுதி ஓவர்களில் களமிறங்கி போட்டியை வெற்றிகரமாக முடித்து வைக்கும் சிறந்த பினிஷராக இவர் உருவெடுத்துள்ளார். டெத் ஓவர்களில் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடிப்பது இவரது சிறப்பம்சமாகும்.

தனது தந்தையின் கிரிக்கெட் கனவை நனவாக்கும் விதமாக இளம் வயதிலேயே ஐபிஎல் தொடரில் தனது முத்திரையை முகுல் சவுத்ரி வலுவாக பதித்துள்ளார். 21 வயதிலேயே நெருக்கடியான கட்டத்தில் இவ்வளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள இவருக்கு, இந்திய கிரிக்கெட்டில் பிரகாசமான எதிர்காலம் உள்ளது என முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.

Story first published: Friday, April 10, 2026, 0:29 [IST]
Other articles published on Apr 10, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+