Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: ஈவு இரக்கமே இல்லாமல் அடி.. பஞ்சாப் கிங்ஸ் பவுலருக்கு நேர்ந்த கதி.. ஐபிஎல்-ன் மோசமான சாதனை

டெல்லி: 2026 ஐபிஎல் தொடரில் தோல்வியையே சந்திக்காத பஞ்சாப் கிங்ஸ் அணியை, டெல்லி கேபிடல்ஸ் அணி தனது சொந்த மண்ணில் வெளுத்து வாங்கியுள்ளது. குறிப்பாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சேவியர் பார்ட்லெட்டின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து டெல்லி பேட்ஸ்மேன்கள் ரன் மழை பொழிந்தனர். இதனால் ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான பந்துவீச்சை பதிவு செய்த பவுலர்களின் வரிசையில் பார்ட்லெட் இணைந்துள்ளார். இத்தனை ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை வாரி வழங்கிய அந்த மோசமான டாப் 5 பந்துவீச்சாளர்கள் யார் யார் என்பது குறித்து இங்கே விரிவாகப் பார்ப்போம்.

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் ஐபிஎல் தொடரின் 35வது லீக் போட்டி நடைபெற்றது. இதில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணிக்கு ஆடுகளம் பேட்டிங்கிற்கு மிகச் சாதகமாக அமைந்தது. சிறிய பவுண்டரிகளை கொண்ட மைதானம் என்பதாலும், மைதானத்தின் புல்வெளி மிக வேகமாக இருந்ததாலும் தொடக்க ஓவர்கள் முதல் இறுதி ஓவர்கள் வரை டெல்லி பேட்ஸ்மேன்கள் சரமாரி தாக்குதல் நடத்தினர். இதனால் டெல்லி அணி ஒரு பிரம்மாண்ட ஸ்கோரை பதிவு செய்து பஞ்சாப் அணியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

IPL 2026 Xavier Bartlett registered the worst bowling spell What are the Worst Bowling Figures in IPL History

இந்தப் போட்டியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் சேவியர் பார்ட்லெட்டின் பந்துவீச்சு தான். தொடக்க ஓவர்களிலும், இறுதி கட்ட ஓவர்களிலும் பந்துவீச வந்த அவர், டெல்லி பேட்ஸ்மேன்களிடம் சிக்கி சின்னாபின்னமானார். துல்லியமாக பந்துவீச தவறிய அவரது பந்துகள் அனைத்தும் ஈவு இரக்கமின்றி சிக்சர்களாக பறந்தன. தனது 4 ஓவர் கோட்டாவில் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். மற்றபடி அவர் அதிகப்படியான ரன்களை வாரி வழங்கினார். 4 ஓவர்களில் 69 ரன்கள் வாரி இறைத்தார். அதன் மூலம் ஐபிஎல் வரலாற்றின் மிக மோசமான ஆறாவது பந்துவீச்சையும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் மிக மோசமான பந்துவீச்சையும் பதிவு செய்தார்.

நவீன டி20 கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எவ்வளவு சவாலானது என்பதை இந்த போட்டி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. தற்போதைய டி20 கிரிக்கெட்டில் இம்பாக்ட் பிளேயர் விதிமுறை, தட்டையான ஆடுகளங்கள் மற்றும் பேட்ஸ்மேன்களின் பயமற்ற அதிரடி அணுகுமுறை ஆகியவற்றால் உலகத்தரம் வாய்ந்த பவுலர்கள் கூட 60 ரன்களுக்கு மேல் வழங்குவது சாதாரணமாகிவிட்டது. அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்களை வாரி வழங்கி மிக மோசமான பந்துவீச்சை பதிவு செய்த டாப் 5 வீரர்களின் பட்டியல் இதோ:

ஜோஃப்ரா ஆர்ச்சர் - 4 ஓவர்களில் 76 ரன்கள் (0 விக்கெட்)

முகமது ஷமி - 4 ஓவர்களில் 75 ரன்கள் (0 விக்கெட்)

வில் ஓ'ரூர்க் - 4 ஓவர்களில் 74 ரன்கள் (2 விக்கெட்)

மோகித் சர்மா - 4 ஓவர்களில் 73 ரன்கள் (0 விக்கெட்)

பசில் தம்பி - 4 ஓவர்களில் 70 ரன்கள் (0 விக்கெட்)

Story first published: Saturday, April 25, 2026, 19:10 [IST]
Other articles published on Apr 25, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+