மும்பை : ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2013-ஆம் ஆண்டு சீசனில் இருந்து பும்ரா விளையாடி வருகிறார். மும்பை அணி ஐந்து முறை கோப்பை வென்றதற்கு பும்ராவின் பந்துவீச்சு தான் மிகவும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
பும்ரா மும்பை அணியின் மீது அவ்வளவு விசுவாசத்துடன் இருந்தாலும், மும்பை அணி அவரை மதிக்காமல் குறைந்த சம்பளத்தை மட்டுமே கொடுத்தது. அது மட்டுமல்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக வேறு அணிக்கு சென்ற ஹர்திக் பாண்டியாவை அழைத்து மீண்டும் கேப்டன் பொறுப்பை கொடுத்தது.

இது பும்ராவுக்கு மனக்கஷ்டத்தை கொடுத்தது. அது மட்டுமில்லாமல் பும்ராவை விட திறமை குன்றிய பலவீரர்கள் ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் அதிக சம்பளம் வாங்கினார்கள். இது பும்ராவுக்கு மேலும் கோபத்தை அதிகப்படுத்தியது. இந்த நிலையில் பும்ராவை விட அதிக ஊதியம் வாங்கும் டாப் ஆறு வீரர்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.
இந்த பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்திருப்பவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் தீபக்சாகர்தான். தீபக் சாஹர் 2024 ஆம் ஆண்டு சீசனில் 14 கோடி ரூபாய் பெற்று இருக்கிறார். இது பும்ராவை விட இரண்டு கோடி ரூபாய் அதிகமாகும். பும்ரா அனைத்து போட்டிகளிலும் விளையாடி வரும் நிலையில் தீபக் சாஹர் காயம் ஏற்பட்டுவிட்டது என்று கூறி அவ்வப்போது சென்று விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பவர் குஜராத் அணியின் ரஷித் கான் தான். ரஷீத் கான் 15 கோடி ரூபாய் ஊதியத்துடன் குஜராத் அணியில் இருக்கிறார். இது பும்ராவை விட மூன்று கோடி ரூபாய் அதிகமாகும். இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அனியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா.
ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில், ஜடேஜா 16 கோடி ரூபாய் ஊதியம் வாங்குகிறார். இது பும்ராவை விட 4 கோடி ரூபாய் அதிகமாகும். எனினும் ஜடேஜா பந்துவீச்சிலும் பெரிய அளவில் சாதிக்கவில்லை. இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் பஞ்சாப் அணியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் சாம் கரன். சாம் கரன் கடந்த ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் 18 கோடியே 50 லட்சம் ரூபாய் வாங்கினார். இது பும்ராவை விட ஆறரை கோடி ரூபாய் அதிகம்.
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த பேட் பாட் கம்மின்ஸ். சன்ரைசர்ஸ் அணி இவரை மினி ஏலத்தில் 20 கோடியே 50 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியது. அது மட்டுமல்லாமல் இவருக்கு கேப்டன் பதவியும் கொடுத்தது. இது பும்ரா வாங்கும் சம்பளத்தை விட எட்டு கோடியே 50 லட்சம் ரூபாய் அதிகமாகும். இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருப்பவர் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க்.
கொல்கத்தா அணி இவரை 24 கோடியே 75 லட்சம் கொடுத்து ஏலத்தில் எடுத்தது. இது பும்ரா வாங்கிய சம்பளத்தை விட 12 கோடியே 75 லட்சம் ரூபாய் அதிகமாகும். இப்படி திறமை இருந்த பும்ரா விசுவாசம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணிகள் தொடர்ந்தாலும், அவரைவிட பல வீரர்கள் அதிக சம்பளம் வாங்குவது நிச்சயம் அவருக்கு ஏமாற்றத்தை தான் கொடுக்கும். இதனால் தனக்கு சம்பளம் அதிகம் வேண்டும் என்ற காரணம் காட்டி பும்ரா அணியை விட்டு வெளியேற வாய்ப்பு இருக்கிறது.