Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

7வது ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பையை வெளியேற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ்!

மும்பை: 7வது ஐ.பி.எல். போட்டியின் வெளியேற்றுதல் சுற்றில் மும்பையை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்து 2-வது தகுதி சுற்றில் பஞ்சாப்புடன் நாளை மோதுகின்றன.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புள்ளி பட்டியலில் 3-வது மற்றும் 4-வது இடங்களை பிடித்த அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன் அணியும் 'வெளியேற்றுதல்' சுற்றில் மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நேற்றிரவு மோதின.

சென்னை அணியில் பிரன்டன் மெக்கல்லம், ஈஸ்வர் பாண்டே அணிக்கு திரும்பினர். மிதுன் மன்ஹாஸ், பத்ரீ நீக்கப்பட்டனர்.

டாஸ் வென்ற சென்னை கேப்டன் டோணி முதலில் மும்பையை பேட் செய்ய அழைத்தார்.

சிமோன்ஸ்- ஹஸ்சி

சிமோன்ஸ்- ஹஸ்சி

லென்டில் சிமோன்ஸும், மைக் ஹஸ்சியும் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். சென்னையின் பந்து வீச்சை சமாளித்து விளையாடிய இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்து மும்பைக்கு நல்ல அடித்தளம் போட்டனர்.

கோரி ஆண்டர்சன்

கோரி ஆண்டர்சன்

மைக் ஹஸ்சி 39 ரன்களில் ஜடேஜாவின் பந்து வீச்சில் அவுட் ஆனார். கோரி ஆண்டர்சன் சிறிது நேரமே மையம் கொண்டாலும், 10 பந்தில் ஒரு பவுண்டரி, 2 சிக்சருடன் 20 ரன்கள் என்று அணிக்கு பயனுள்ள பங்களிப்பை அளித்தார்.

சிமோன்ஸ் 67 ரன்

சிமோன்ஸ் 67 ரன்

இதைத் தொடர்ந்து சிமோன்ஸ், கேப்டன் ரோகித் ஷர்மாவும் கைகோர்த்தனர். 16 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 140 ரன்கள் என வலுவான நிலையை நோக்கி சென்று கொண்டிருந்த மும்பை வீரர்களை கடைசி நேரத்தில் சென்னை பவுலர்கள் கட்டுப்படுத்திவிட்டனர். சிமோன்ஸ் 67 ரன்களிலும் ரோகித் ஷர்மா 20 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

174 ரன்கள் இலக்கு

174 ரன்கள் இலக்கு

20 ஓவர்களில் மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் குவித்தது. கடைசி 4 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 33 ரன் மட்டுமே எடுத்தது.

மொகித் ஷர்மா 3 விக்கெட்டுகள்

மொகித் ஷர்மா 3 விக்கெட்டுகள்

சென்னை தரப்பில் மொகித் ஷர்மா 3 விக்கெட்டுகளும், ஆஷிஷ் நெஹரா, ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

தப்பிய சுமித்

தப்பிய சுமித்

பின்னர் 174 ரன்கள் இலக்கை நோக்கி சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வெய்ன் சுமித்தும், பாப் டு பிளிஸ்சிஸ்சும் களம் இறங்கினர். சுமித் 5 ரன்னில் இருந்த போது, பிரவீன்குமாரின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அது நல்ல அவுட் என்ற போதிலும், நடுவர் ஆக்சன்போர்டு அவுட் வழங்க மறுத்ததால் சுமித் தப்பினார்.

6 ஓவரில் 60 ரன்கள்..

6 ஓவரில் 60 ரன்கள்..

பிளிஸ்சிஸ் 16 ரன்னில் இருந்த போது தூக்கியடித்த கேட்ச் வாய்ப்பை, அம்பத்தி ராயுடு, ஹர்பஜன்சிங் இருவரும் வீணடித்தனர். இதனால் இந்த கூட்டணி முதல் 6 ஓவர்களில் 60 ரன்கள் குவித்தது.

வெய்ன் சுமித் 24 ரன்களிலும் பிளிஸ்சிஸ் 35 ரன்களிலும் மெக்கல்லம் 14 ரன்களிலும் எடுத்து அவுட் ஆனார்கள்.

அசத்திய ரெய்னா, டேவிட் ஹஸ்சி

அசத்திய ரெய்னா, டேவிட் ஹஸ்சி

இதைத் தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவும், டேவிட் ஹஸ்சியும் அமர்க்களப்படுத்தினர். இவர்கள் சிக்சரும், பவுண்டரியுமாக விரட்டியடித்து சென்னை அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.

சென்னை வெற்றி

சென்னை வெற்றி

சென்னை அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 176 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பஞ்சாபுடன் நாளை மோதல்

பஞ்சாபுடன் நாளை மோதல்

இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்து இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் பஞ்சாப்புடன் மும்பை நகரில் நாளை மோதும். இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

Story first published: Thursday, May 29, 2014, 8:53 [IST]
Other articles published on May 29, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+