Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி 7வது வெற்றியை பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்!!

மும்பை: 7வது ஐ.பி.எல். போட்டியில் நேற்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 7-வது வெற்றியை பதிவு செய்தது.

7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் 33-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸும், 2 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸும் மோதின.

சென்னை அணியில் ல்பனாஸ் நீக்கப்பட்டு, சுழற்பந்து வீச்சாளர் சாமுவேல் பத்ரீ சேர்க்கப்பட்டார். டாஸ் ஜெயித்த சென்னை அணியின் கேப்டன் டோணி முதலில் மும்பையை பேட் செய்ய அழைத்தார்.

பத்ரீயால் பலன்

பத்ரீயால் பலன்

மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த லென்டில் சிமோன்ஸும், சிதம்பரம் கவுதமும் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். கவுதம் 9 ரன்களில் பத்ரீயால் அவுட் செய்யப்பட்டார். அடுத்து அம்பத்தி ராயுடு ஆட வந்தார்.

சிமோன்ஸ்- ராயுடு அபாரம்

சிமோன்ஸ்- ராயுடு அபாரம்

சிமோன்ஸும், ராயுடுவும் நிலைத்து நின்று ஆடினார்கள். பத்ரீயின் ஒரே ஓவரில் சிமோன்ஸ் தொடர்ந்து இரு சிக்சர்களை பறக்க விட்டார். ஆனால் பவர்-பிளேக்கு பிறகு இவர்களின் ரன்குவிப்பை சென்னை பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தினர். சிமோன்ஸ் 38 ரன்களில் அவுட் ஆனார். இதில் 3 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடங்கும்.

19 ரன்களில் ரோகித் அவுட்

19 ரன்களில் ரோகித் அவுட்

அடுத்து வந்த கேப்டன் ரோகித் ஷர்மா 19 ரன்னில் அவுட் ஆனார்.

பொல்லார்டு டக் அவுட்

பொல்லார்டு டக் அவுட்

சென்னை அணியின் அஸ்வின், பொல்லார்ட்டை டக்-அவுட்டில் வீழ்த்தி அசத்தினார். அம்பத்தி ராயுடு 59 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

கோரியின் 2 சிக்சர்

கோரியின் 2 சிக்சர்

கடைசி ஓவரில் கோரி ஆண்டர்சன், ஈஸ்வர் பாண்டேவின் ஓவரில் இரண்டு சிக்சர் விரட்ட, அந்த அணி 150 ரன்களை கடந்தது. 20 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது.

அஸ்வின் 3 விக்கெட்டுகள்

அஸ்வின் 3 விக்கெட்டுகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அஸ்வின் 30 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஏமாற்றிய தொடக்க வீரர்கள்..

ஏமாற்றிய தொடக்க வீரர்கள்..

பின்னர் 158 ரன்கள் இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது. மெக்கல்லம் 13 ரன்களிலும் சுரேஷ் ரெய்னா 19 ரன்களிலும் அவுட் ஆகினர்.

ஸ்மித் அசத்தல்

ஸ்மித் அசத்தல்

ஆனால் சென்னை அணியின் ஸ்மித் 51 பந்துகளில் 57 ரன்களைக் குவித்தார். இதில் 5 பவுண்டரிகள், 3 சிக்சர் அடங்கும். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த பிளிஸ்சிஸ் 31 ரன்களிலும் ரவீந்திர ஜடேஜா 6 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

மலிங்காவின் காட்டம்

மலிங்காவின் காட்டம்

மும்பை இந்தியன்ஸ் அணியின் மலிங்காவின் கடுமையான பந்துவீச்சினால் ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியது.

பரபரப்பான கடைசி ஓவர்

பரபரப்பான கடைசி ஓவர்

கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டன. 20-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் பொல்லார்ட் வீசினார். இதில் முதல் பந்தில் வைடு வகையில் ஒரு ரன் கிடைத்தது.

மீண்டும் வீசப்பட்ட முதல் பந்தில் டோணி 2 ரன்களை எடுத்தார். இதன் பின்னர் 2-வது பந்தை சிக்சருக்கும், 3-வது பந்தை பவுண்டரிக்கும் விரட்டி, டோணி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார்.

சென்னை வெற்றி

சென்னை வெற்றி

சென்னை அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 160 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் 7-வது வெற்றியை பெற்றது. டோணி 22 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார்.

மும்பைக்கு 6வது தோல்வி

மும்பைக்கு 6வது தோல்வி

நடப்பு 7வது ஐ.பி.எல். போட்டியில் 8-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இது 6-வது தோல்வியாகும்.

Story first published: Sunday, May 11, 2014, 9:40 [IST]
Other articles published on May 11, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+