For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் 7: சேவாக், யுவராஜுக்கு அடிப்படை விலையே ரூ.2 கோடி!!

By Mathi

பெங்களூர்: எதிர்வரும் ஐபிஎல் 7வது போட்டியில் வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங் ஆகியோருக்கான அடிப்படை விலையாக ரூ 2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 7வது போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் அடுத்த மாதம் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் இடம்பெற்றுள்ள 233 வீரர்களின் பெயர்களை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

46 இந்திய வீரர்கள்

46 இந்திய வீரர்கள்

இந்த பட்டியலில் மொத்தம் 46 இந்திய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். இதேபோல் 46 ஆஸ்திரேலிய வீரர்களும் இருக்கின்றனர்.

யுவராஜ், சேவாக்

யுவராஜ், சேவாக்

இந்த பட்டியலில் தற்போது இந்திய அணியில் இடம்பெறாத சேவாக் மற்றும் யுவராஜ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு மிக அதிகபட்சமாக ரூ2 கோடி அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ2 கோடி குரூப்

ரூ2 கோடி குரூப்

இதேபோல் இந்திய வீரர்களான உத்தப்பா, பிரவீன்குமார், தினேஷ் கார்த்திக், அமித் மிஸ்ரா, நெஹ்ரா, யூசுப் பதான், மனோஜ் திவாரி, முரளி விஜய் ஆகியோருக்கும் ரூ 2 கோடி அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆஸி வீரர்கள்

ஆஸி வீரர்கள்

ஆஸ்திரேலியாவின் ஸ்மித், ஹாட்ஜ், ஸ்டார்க், பெய்லி, ஹட்டின், பிரெட்லீ, மார்ஷ், பேட்டின்சன் ஆகியோருக்கும் கூட ரூ 2 கோடி அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ30 லட்சம்

ரூ30 லட்சம்

இந்த ஏலம் ரூ30 லட்சம் என்ற குறைந்த தொகையில் இருந்து தொடங்குகிறது. அதிகபட்சமாக ரூ2 கோடி அடிப்படை விலையாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Story first published: Wednesday, January 29, 2014, 13:18 [IST]
Other articles published on Jan 29, 2014
English summary
Virender Sehwag, Yuvraj Singh, Michael Hussey, Mitchell Johnson are among the players who have received the highest base price of Rs 2 crore for the 2014 Indian Premier League (IPL 7) Player Auction.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+